பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154

நமனை யஞ்சோம்’ என்று பாடுகின்றர். வேறு பன் அடியார்களும் இவரைப் போலவே பாடியுள்ளதை நாம் அறிவோம். ஆகவே, தெய்வ பக்திக்கு உரைகல் பயமின்மை.

நோயில்லாத உடம்பு வேண்டும் என்பதை யும் பாரதியார் பல இடங்களிலே வற்புறுத்திக் கூறுவதை நாம் பார்க்கிருேம். உடலினை உறுதி செய்’ என்பது கவிஞருடைய புதிய ஆத்திசூடி “வலிமையற்ற தோளிய்ை போ போ போ என்றும் பாரதியார் சீறுகின்றார்.

பஞ்சத்தால் வாடுகின்ற மக்கள் பிணியால் உழல்வதைக் கண்டு அவர் மிகவும் வரு ந் துகிருt தம்மையே இந்த நாடு உறுதியற்ற உடம்புடைய வராகச் செய்துவிட்டது. ஆனால், அதற்காக அவர் யாரையும் நொந்து கொள்ளவில்லை.

1915 ஜூலை 2ஆம் தேதியில் அவர் எழுதிய ‘சித்தக் கடல் குறிப்பைப் பாருங்கள். இது அவருடைய நாட்குறிப்பாகக் கொள்ளத்தக்கது. தொடர்ந்து எழுதவில்லை யென்றாலும் கிடைத்த அளவுக்கு பாரதியாருடைய உள்ளப்போக்:ை நன்கு புலப்படுத்துகிறது. அவர் சொல்லுகிறார் ‘புகையிலே வழக்கம் தொலைந்துவிட்டது பராசக்தியின் அருளால், இனிக் கஸ்ரத் வழக்கி ஏற்படவேனும், பராசக்தியின் அருளால். தோ: விம்மி வயிரம் போலாக வேணும். நெஞ் விரிந்து, திரண்டு, வலிமையுடையதாக வேனும் இரத்தம் மாசு தீர்ந்து, நோயின்றி நன்றாக ஒபு உடலை நன்கு காத்துக்கொண்டிருக்க வேணும்: பராசக்தியின் அருளால்.” இப்படிப்பட்ட பக்