பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xyi

கேட்டாராம்: “ஐயா, பாரதியாரே! உங்கள் கொள்கைகள், கருத்துக்கள் எல்லாம் எனக்குத் திருப்திகரமாக இருக்கின்றன. தாங்கள் சொல்வதை நான் ஒப்புக்கொள்வதும், நான் சொல் வதைத் தாங்கள் ஒப்புக் கொள்வதும் நமக்குள் இயல்பாக இருக்கிறது. ஜனங்களில் பலர் நாம் தப்பிதமான கொள்கை களை வைத்திருப்பதாகச் சொல்கிறார்களே அதற்கென்ன செர்ல் கிறீர்கள்?’ என்று கேட்டாராம்.

அதற்கு பாரதியார், “நாம் இப்பொழுது சொல்வனவற்றை யெல்லாம் நானுாறு வருஷங்கள் கழித்து உலகம் ஒப்புக் கொள்ளும். நாம் இன்னும் நானுாறு வருஷங்களுக்குப் பின்னலே தோன்ற வேண்டியவர்கள்; முன்னலேயே தோன்றி விட்டோம். அதற்கென்ன செய்வது? என்று பதிலளித்தாராம் பாரதியார்.

விடுதலை கிடைத்தவுடன், சமூகசீர்த்திருத்தங்களெல்லாம் உடனே நடைபெற்று விடும் என்று நானும் எதிர்பார்த்து ஏமாந்தேன். இதை நினைக்கும் போது தமிழ் மக்களின் மேல் எனக்கு அடங்காத கோபம் உண்டாகிறது.

ஆனல், தமிழ் மக்கள் விவேகமும் சிறந்த மதிநுட்பமும் வாய்ந்தவர்கள். அவர்களின் மேல் எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு. பாரதியார் சொல்லியது போல நானுாறு ஆண்டுகள் காத்திருக்க வேண்டாம். ஒரு நாற்பது ஆண்டுகளிலே சமூக சீர்திருத்தங்களுள் எல்லாம், துருப்பிடித்தனவற்றை வீசி யெறிந்து விட்டு நல்லதைக் கைக் கொள்வார்கள் என்று நிச்சயமாக நம்புகிறேன்.

“தமிழா தெய்வத்தை நம்பு. பயப்படாதே. உனக்கு நல்ல காலம் வருகின்றது’ என்ற பாரதியார் வாக்கை வேதவாக் காகக் கொள்வோம். ஆயிரம் ஆண்டுகளாகப் பயனற்றுப்போன கொள்கைகளை தைரியமாக உதறித்தள்ளுவோம். பயனுள்ள வற்றை கெட்டியாகப் பிடித்துக் கொள்வோமாக். வாழ்க தமிழன்; வாழிய வாழிய!

ம. ப. பெரியசாமித் துரன்