பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I jj

யில்லாவிட்டால், தேங்காய்க்கும் சர்க்கரைப் பொங்கலுக்கும் வீண் செலவு என்று கவிஞர் நகைச்சுவையோடு தெரிவிக்கிரு.ர்.

இந்தக் கட்டுரையில்தான் செல்வர்களுடைய கடமையைத் தெளிவாகக் கூறுகின்றார். செல்வத் தைப் பகிர்ந்து கொடுத்துவிட்டு ஏழையாகிவிட வேண்டும் என்று அவர் சொல்லவில்லை. செல்வத் தைக்கொண்டு தொழிலைப்பெருக்கி அனைவருக்கும் சோறு போடும்படி அவர் பணிக்கிரு.ர். அப்படிச் செய்யாத செல்வர் திருடர்கள் என்கிரு.ர். அந்த ஊரில் வசிக்கும் குருக்க ளெல்லாம் பொய்யர்; அறிஞரெல்லாம் மூடர் என்று பச்சையாகவே எழுதி விடுகி ஒர்.

செல்வர்கள் டிரஸ்டிகளைப்போல வாழ்ந்து மற்றவர்களுக்கு அச்செல்வத்தால் விளையும் பயனை அடையும்படி செய்ய வேண்டும் என்ற காந்தியடிகளின் கருத்தை இந்த இடத்தில் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும்.)

‘இவ்வுலகத்தில் மனிதனுக்கு ஏற்படக்கூடிய வலிமை களையெல்லாம் நான் எனக்கு உண்டாக்கிக் கொள்வேன். மனிதனுக்கு வசப்படக்கூடிய செல்வங்களையெல்லாம் எனக்கு வசமாக்கிக் கொள்வேன். மனிதனுக்கு விளையக் கூடிய அறிவுகளையெல்லாம் என்னிடம் விளைவித்துக் கொள்வேன். மனிதனுக்கு கிடைக்கக்கூடிய இன்பங்களை யெல்லாம் நான் தேடியனுபவிப்பேன்; ஸ்ர்வ சக்தி பெறுவேன்.’

என்று மனத்திலே ஒரு நிச்சயம் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். மாrமை பெறுவதற்குத் தீராத விருப்பமும் துணிவுமே வழி. வேறு வழியில்லை. ஒருவன் தெய்வ பக்தி