பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160

வேலை வாங்கிக்கொண்டு சரியானபடி கூலி கொடு உனக்கும் நல்ல லாபம் கிடைக்கும். கூலி குறையக் கொடுக் கும் முதலாளி லக்ஷ்மிதேவியைக் காலால் உதைக்கிருன். அவன் மகன் தரித்திரத்திலும் நோயிலும் வருந்துவான். ஸகல ஜனங்களுக்கும் வயிறு நிறைய உணவு கிடைக்காத ஊரில் வாழும் செல்வர்களெல்லாம் திருடர். அங்கே குருக்களெல்லாம் பொய்யர். பண்டிதரெல்லாம் மூடர். மேன்மை நிலைபெற வேண்டுமானல் கைத்தொழில்கள் பெருகும்படி செய்ய வேண்டும். சாத்தியமில்லையென்று சொல்லி ஏங்குவதிலே பயனில்லை. எப்படியேனும், எப்படி யேனும், எப்படியேனும் செல்வத்தை வளர்க்க வேண்டும்.

31. வருங்காலம்

11 ஜூலை 1916

(குறிப்பு : பாரதியாருக்குத்தான் எத்தனை ஆசை கிணற்றுத் தவளைகளைப்போல் வாழாமல், வெளிநாடுகள் பலவற்றிற்கும் செல்லவேண்டும். உயர்ந்த கல்வி கற்று உலகமே வியக்கும்படியான யோசனைகளைச் சொல்லவேண்டும். கைத்தொழில் ஆயிரம் ஆயிரமாகப் பெருகவேண்டும். கப்ப லேறிப் போங்கள், புறப்படுங்கள், புறப்படுங்கள் என்று தூண்டுகிறார் கவிஞர்.

இன்று நாம் என்ன பார்க்கிருேம். பலர் வெளிநாடுகளுக்குச் செல்கிறார்கள். மெச்சிப் புகழும்படி தேர்ச்சி பெறுகிறார்கள். ஆனல்... ஆனல் அந்த நாட்டிலே தங்கி விடுகிறர்கள்,