பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162

யோசனைகள் செய்து நிறைவேற்றிப் புகழ்பெற வேண்டும் கைத் தொழில்களின் விஷயத்திலே நாம் இப்போது காட்டி வரும் சோர்வும் அசிரத்தையும் மிகவும் அருவருப்புக்கு இடந் தருகின்றன.

திருஷ்டாந்தமாக, நேர்த்தியான சித்திரங்களும் வர்ணங்களும் சேர்த்துப் பட்டிலும் பஞ்சிலும் அழகான ஆடைகள் செய்யவல்ல தொழிலாளிகள் நமது நாட்டில் இருக்கிறார்கள். இவர்களுக்குப் படிப்பில்லை; வெளியுலக நிலை தெரியாது. கையிலே முதற் பணமுமில்லை. நம்முள்ளே கல்வியும் செல்வமும் உடையோர் கூடி ஆராய்ச்சிகள் செய்து, வெளிநாடுகளில் ஆவலுடன் வாங்கக்கூடிய மாதிரி கள் எவை என்பதைக் கண்டுபிடித்து, அவற்றை நமது தொழிலாளிகளைக்கொண்டு செய்வித்தால் மிகுந்த லாப முண்டாகும்.

இரும்புத்தொழில் உலகத்திலே வலிமையும் செல் வமுங் கொடுப்பது. எல்லாவிதமான கைத்தொழில்களும் தற்காலத்தில் இரும்பு யந்திரங்களாலே செய்யப்படுகின் றன. ஆதலால், நமது தேசத்துக் கொல்லருக்கு நாம் பல விதங்களிலே அறிவுவிருத்தியும் ஜீவன ஸெளகர்யங்களும் ஏற்பாடு செய்துகொடுத்து இடத்துக்கிடம் இயன்றவரை இரும்புத் தொழில்களை வளர்க்க வேண்டும்.

இனி, வர்ணப்படம், தையல் வேலை...மைத் தொழில் முதலிய சித்திர வேலைகளில் நமது ஜனங்களின் அறிவு மிகவும் சிறந்தது. கொஞ்சம் சிரமப்பட்டால், இந்தத் தொழில்களை மறுபடி உயர்ந்த நிலைமைக்குக் கொண்டு வந்துவிடலாம். சிறிது காலத்துக்கு முன்பு சீனத்திலிருந்தும் ஜப்பானிலிரு ந்தும் பல சித்திர வேலைகளைக் கொண்டுபோய் அமெரிக்காவில் காட்டியபோது, அங்கே அவற்றிற்கு மிகுந்த புகழ்ச்சியும் பிரியமும் ஏற்பட்டதாகத் தெரிகிறது.