பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170

சிஷ்யன் சரீரமென்பது அவர் கொள்கை. ஆத்ம ஞானி சோம்பேறியாக இருக்கமாட்டானென்கிற இவர

கொள்கை பகவத்கீதையின் கருத்துக்கு இணங்கியல், யாகும். தொழிலின்றி இருப்பவனுக்கு விடுதலையில்: ஞானமில்லை, பக்தியில்லை. அவனுக்குச் சோறு கிடையாது. தண்டச்சோறு தின்று தொழில் செய்யாதிருப்பவன் கொழுத்து நோய்கொண்டு சாவான். இந்த விஷயங்கள் பகவத் கீதையில் மிகத்தெளிவாகச் சொல்லப்படுகின்றன.

கார்லைல் (7) என்ற ஆங்கிலேய ஆசிரியர், தொழிலின்றி இருப்பவனைச் சந்தேகம் முதலிய பிசாசுகள் வந்து தாக்கு மென்று சொல்லிய வார்த்தை பொது அநுபவத்திலே காணத்தக்கது. சந்தேகம், பயம் முதலிய பிசாசுகள் வந்து தாக்காமலிருக்கும் பொருட்டாகவும், அங்ஙனம் தாக்கும் போது அவற்றை மடிக்கும் பொருட்டாகவும், தொழி லென்ற மருந்தைக் கடவுள் கொடுத்திருக்கிறார்.

பூஜை, கல்வி, போதனை முதலியனவும் சரீர உழைப்புப் போலவே கவலையை நீக்கி உடம்பைப் பேணும். உண்மை யாகச் செய்யப்படும் பூஜையும், உபதேசமும் எல்லாத் தொழில்களைக் காட்டிலும் சிறந்தன. பொய்ப் பூஜையும், காசைப் பெரிதாக நினைத்துச் செய்யும் ஞானுேபதேசமும் மிகவும் இழிந்த தொழில்களாகும். பல இடங்களில் வியாபாரிக்குள்ள மதிப்புப் பூசாரிக்கும் குருக்களுக்கும் இல்லாதிருக்கக் காண்கிருேம். இவர்களுக்கு மதிப்புக் குறை வுண்டாகும் காரணம் உண்மைக் குறைவுதவிர வேருென்று மில்லை. அறிவை நல்ல வழிகளில் உழைப்பவனுடைய உடம்பு முயற்சியில்லாமல் சோம்பிப் படுத்திருக்க நியாய் மில்லை. சோம்பேறியின் விருப்பங்கள் கவலைகளாக மாறு கின்றன. கையில்ை உழைக்காமல் ம ன த் தா? விரும்புவோன் தன்னைத்தானே தின்றுகொள்கிருன்