பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

173

காளி : இந்த பூமியில் இன்னும் நாமே நெடு நாளி லிருந்து பலவித நியாயங்கள் நடந்து நிறைவேறுவதைப் பார்க்கப் போகிருேம். பூமியில் நல்ல யுகம் தோன்றப் போகிறது. மனித ஜாதி முழுமைக்கும் விடுதலையுண்டாகப் போகிறது. நீர் சொல்லிய ருஷிய ராஜ்யப் புரட்சியானது, இனி வரப்போகிற நற்காலத்தின் முன்னடையாளங்களில் ஒன்று. பூமி தூளாகாது. மனிதர் ஒருவருக்கொருவர் செய்யும் அநீதி தூளாகும்.

35. கடற்பாலத்தில் வர்ணுஸ்ரம சபை

7 ஏப்ரல் 1917

(குறிப்பு : ஏதோ இயல்பாகப் பேசுவது போலத் தொடங்கி, பாரதியார் தமக்குப் பிடித்த மான கொள்கைகளை நுழைத்து விடுவார் என்பதற்கு, இக் கட்டுரையும் ஒர் எடுத்துக் காட்டு. அன்பே பிரதானம் என்பதைச் சொல்லு வதில் அவர் சலிப்பதே இல்லை. கலியுகத்திலே ஒரு குட்டிக் கிருதயுகம் தோன்றும் என்று அவர் நம்பினர். அப்படித் தோன்றுவதற்கு அன்பு அடிப்படையாக அமைய வேண்டும் என்பது அவர் கருத்து. தொழில் எதைச் செய்தாலும் அதைக் கொண்டு ஜாதி வேறுபாடுகள் இருக்கக் கூடாது; எல்லாத் தொழிலும் சமமான தகுதி யுடையவை என்று, கவிஞர் இக் கட்டுரையிலும் குறிப்பிடுகிரு.ர்.

“செம்படவன் மகன் சாஸ்திரத் தேர்ச்சி பெற்று விட்டால் அவனுக்கு என் பெண்ணை