பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174

விவாகம் செய்து கொடுப்பேன்” என்று சேஷய்யங் காரைச் சொல்ல வைக்கிறார் என்ன உத்ஸாகம்! எத்தனை எதிர்பார்ப்பு!)

வஸந்த காலத்தில் ஒரு நாள் காலையில் இளவெயில் அடிக்கும் நேரத்தில் வேதபுரத்திலுள்ள கடற்பாலத்தின் கடைசியில், நடுக் கடலின்மீது ஒரு செம்படவன் உட்கார்ந்து மீன்பிடித்துக் கொண்டிருந்தான். அங்கே நானும், எனது நண்பர் சக்ரவர்த்தி சேஷய்யங்காரும் சரீர சுகத்திற்காக நடைபழகப் போனேம். அங்கு புதிதாகச் செய்துவைக்கப் பட்டிருந்த ராஜாங்கத் தோணிகளின் நிழலிலே போய் சிறிதுநேரம் உட்கார்ந்து ஆயாலம் தீர்த்துக் கொள்ளலாமென்று சேஷய்யங்கார் சொன்னர், அந்த நிழலிலேபோய் உட்கார்ந்தோம். என் கையில் சில வர்த்தமானப் பத்திரிகைகள் கொண்டு போயிருந்தேன், அவற்றை யெடுத்து வாசித்துக் கொண்டிருந்தேன். சேஷய்யங்காருக்குப் போது போகவில்லை. அவர் அந்த மீன் பிடிக்கும் செம்படவனிடத்திலே போய்ப் பேச்சுக் கொடுத் தார். அவனே மீன் சரியாகக் கிடைக்க வில்லை யென்ற கோபத்திலிருந்தான். சிறிது நேரம் கழிந்தபிறகு சேஷய் யங்கார் என்ன நோக்கி, “வீட்டுக்குக் கிளம்பலாம்; புறப் படும்’ என்றார்.

நான் சொன்னேன் :

“ஸ்வாமி, நான் காலையில் காபி குடித்துவிட்டுத்தான் வீட்டிலிருந்து புறப்பட்டேன். எனக்கு இங்கே சிறிது நேரம் தனியே யிருப்பதில் பிரிய முண்டாகிறது. நீர் அவஸரமானல் வீட்டுக்குப்போம். நான் கொஞ்சம் இங்கே இருந்துவிட்டு வருகிறேன்” என்றேன்.

அப்போது சேஷய்யங்கார் புன்சிரிப்புடனே, “நான் ஆஹாரமில்லாமல் வெளியே புறப்படும் வழக்கம் எ!