பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/191

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


176

சேஷய்யங்கார் இதைக் கேட்டவுடனே கால் ரூபாயை அவன் கையிலே கொண்டு போய்க்கொடுத்து, அவனை யழைத்து வந்து நாங்களிருந்த நிழலிலே உட்காரும்படி செய்தார். இவருடைய படாடோபத்தைக் கண்டு ஆரம் பத்திலே அவன் கொஞ்சம் பயந்தான். பிறகு அவர் சொன்னபடி கேட்டால் காசு கிடைக்குமென்று தெரிந்து கொண்டு, அவன் எங்கள் பக்கத்தில் வந்து உட்கார்ந்தான்.

சேஷய்யங்கார் உபந்யாஸிக்கலானர் :

‘நாலு ஜாதிதான் உண்டு. பிரம, rத்திரிய, வைசிய, குத்ரர். படித்தவன் பிராமணன்; வீரன் கூடித்திரி யன்; தந்திரசாலி வைசியன்; தொழிலாளி சூத்திரன். இது எந்த தேசத்திலும் உண்டு. எந்தக் காலத்திலும் உண்டு. இதை மாற்றவே முடியாது.”

செம்படவன் :- “மெய்தான் சாமி, மெய்தான் சாமி” என்றான்.

சேஷய்யங்கார் - “இந்தச் செம்படவன் மகன் படித்து சாஸ்திரத் தேர்ச்சி யடைந்து பிரமஞானியாய் விட்டால், அவனுக்கு என் பெண்ணை விவாகம் செய்து கொடுப்பேன். அதில் தோஷமில்லை’ என்றார்,

செம்படவன் நடுங்கிப் போனன். ஐயங்காருக்கு புத்தி ஸ்வாதீனமில்லை யென்று நினைக்கத் தொடங்கினன்.

சேஷய்யங்கார் மொழிகிறார்:- “ஆல்ை குலத்தையும் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். குலத்தளவே யாகும் குணம் என்று பெரியோர் சொல்லியிருக்கிறார்கள் அம்பட்டனுடைய குழந்தை சிறு பிள்ளையாக இருக்கும் போதே ஒருவரும் சொல்லிக்கொடுக்காமல் தானகவே சிரைக்கக் கற்றுக்கொள்ளுகிறது. கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவிபாடும்; ராஜா வீட்டுப் பிள்ளை இயற்கிை