பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/193

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


I78

என்று கேட்டேன். ‘பறையன்” என்றன். இதைக் கேட்ட வுடன் சக்ரவர்த்தி சேஷய்யங்கார் திரும்பிப் பார்த்தார்.

II

சக்ரவர்த்தி ஷேய்யங்கார் கிழச் சாம்பான உட்காரத் சொன்னர். அவன் உட்கார்ந்தான். ‘"நான் சொல்லிய வார்த்தைகளை நீ மிகவும் கவனத்துடன் கேட்டுக் கொண் டிருந்தாயே, நீ யார்? உன் பெயர் என்ன?” என்று சேஷய்யங்கார் சொன்னர்.

அப்போது கிழச்சாம்பான் சொல்லுகிருன்:

“சாமிகளே, நான் பஞ்சம ஜாதி. என் பெயர் லக்ஷ்மணன். பிராம்மணரே எங்களுக்கு குரு. முன்பொரு மாட்டுக் கொட்டகையில் எங்கள் தாயாகிய ஆதியை பகவன் என்ற பிராம்மணன் மனைவியாகச் செய்து கொண்டான். பிராம்மண ஜாதி எங்களுக்குத் தகப்பன் முறை. இக்காலத்தில் பலர் எங்களுக்கு உபகாரம் பண்ண வருகிறார்கள். எல்லா மனிதரும் சரிசமான மென்றும் மனிதருக்குள் எவ்விதமான பேதமும் கிடையாதென்றும் பலர் சொல்லுகிறார்கள். எல்லாம் வாய்ப் பேச்சாகத் தானிருக்கிறது. நடத்தையில் ஒன்றையும் காணவில்லை. ஹிந்து மதத்தில் எங்களுடைய நிலைமை தாழ்ந்திருக்கிற தென்றும், கிறிஸ்து மதத்தில் சேர்ந்தால் எங்களுடைய நிலைமை மேன்மைப்படுமென்றும் சொல்லிக் கிறிஸ்தவப் பாதிரிகள் எங்களிலே சிலரைக் கிறிஸ்து மதத்தில் சேர்த் தார்கள். அதில் யாதொரு பயனையும் காணவில்லை. நூற்றிலொருவனுக்குப் பத்துப் பதினைந்து ரூபாய் சம்பளத் தில் ஒரு வேலை கிடைக்கிறது. மற்றவர்களெல்லாரும்துரை மாரிடத்தில் சமையல் வேலை பண்ணுதல், பயிரிடுதல்,