பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

179

ஒப்பை வாருதல் முதலிய பழைய தொழில்களைத்தான் செய்து வருகிறார்கள். எனக்கு முன்னேருடைய மதமே பெரிது. கிறிஸ்தவர்களுடன் எங்களுக்குக் கொடுக்கல், வாங்கல், சம்பந்தம், சாப்பாடு ஒன்றுமே கிடையாது. என்ன கஷ்டமிருந்தாலும் நாங்கள் ஹிந்து மதத்தை விடமாட்டோம். உங்களைப் போலே எல்லாப் பார்ப்பாரும் எங்களிடம் அன்பு பாராட்டினல், பிறகு எங்களுக்கு யாதொரு குறையுமில்லை. தொழில் ஏதாயிருந்தாலும் குற்றமில்லை. ஒரே தேசத்தில் பிறந்து, ஒரே மதத்தைச் சேர்ந்து, ஒரே கூட்டமாக இருக்கும் ஹிந்துக்கள் ஒருவருக் கொருவர் அன்போடிருக்க வேண்டாமா? எங்கள் ஜாதிக் காரருக்குச் சோறும் துணியும் நேரே கிடைத்து வருகிறதா என்பதைக்கூட மற்ற ஹிந்துக்கள் கவனியாமலிருப்பது நியாயமா? எந்தத் தொழில் செய்து பிழைத்தாலும் தெய்வ பக்தி இருந்தால் இஹத்தில் மேன்மையும் பரத்திலே மோக்ஷமும் உண்டு. திருவள்ளுவர் எங்கள் குலத்தில் வளர்ந்தார்.”

இங்ஙனம் அவன் பேசிக்கொண்டு போகையில் சக்கரவர்த்தி சேஷய்யங்கார் அவனை நோக்கி, “உனக்கு வயதென்ன?” என்று கேட்டார்.

‘நீங்களே சொல்லுங்கள். எனக்கு வயதெவ்வளவிருக் கலாம்?’ என்று கிழச்சாம்பான் திருப்பிக் கேட்டான்.

‘அறுபதிருக்கும்?’ என்றார் அய்யங்கார். “'என்னைப் பார்த்தவர்களெல்லாம் ஐம்பதறுபது வயதென்று தான் மதிக்கிறார்கள். ஆனல் எனக்கு எண்பது பிராயமாய் விட்டது. இந்தப் பாலம் கட்டின போது எனக்குத் தெரியும். அந்தக் காலத்தில் நான் இருவது வயதுப் பிள்ளை. நானும் இதில் வேலை செய்தேன். தித்தம் மூன்றணுக் கூலி’ என்று கிழவன் சொன்னன்.