பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 80

‘இப்போது உனக்கு ஜீவனம் சுகமாக நடந்து வருகிறதா?’ என்று அய்யங்கார் கேட்டார்.

“சுகந்தான் சாமி. இரண்டு பெண்ணும் ஒரு பிள்ளையும் கடவுள் கொடுத்திருக்கிறார். இரண்டு பெண்ணையும் சரியான இடத்தில் கட்டிக்கொடுத்து விட்டேன். மகன் பயிர்த்தொழில் செய்கிருன். நான் மாட்டு வண்டி வைத் திருக்கிறேன். கடலோரத்துக்குக் கிடங்குகளிலிருந்து சரக் கேற்றி வந்தால் வியாபாரிகள் கூலி கொடுப்பார்கள். அதில் எனக்குக் கூடியவரை சரியான வரும்படி கிடைத்து வருகிறது. இப்போது சண்டையில்ை மணிலாக்கொட்டை ஏற்றுமதி குறைந்திருக்கிறது. அதல்ை எனக்கு வரும்படி யில்லாமலிருக்கிறது. இருந்தாலும், கடவுள் கிருபையால் போஜனத்துக்குக் கஷ்டமில்லை” என்று கிழச்சாம்பான் சொன்னன்.

‘இவ்வளவு படிப்பு நீ எங்கே படித்தாய்?” என்று நான் அந்தக் கிழச் சாம்பானிடம் கேட்டேன். அதற்குக் கிழச் சாம்பான் சொல்லுகிருன்:

என்னுடைய பிதாவுக்கு வாத்தியார் வேலை. அவர் தமிழிலே மேலான படிப்புள்ளவர். நானும் திருக்குறள் முதலிய சாஸ்திரங்கள் படித்திருக்கிறேன். படிப்பிலே என்ன பயனுண்டு, சாமி? பெரியோர்களுடைய சேர்க்கை யால் தெய்வபக்தி ஏற்பட்டது. அதையே ஊன்றுகோலாகக் கொண்டு பிழைத்து வருகிறேன்’ என்றான்.

அப்போது சேஷய்யங்கார் அவனை நோக்கி:

“இந்த தேசத்து ஜாதிக்கட்டு அநியாயமென்று உனக்குத் தோன்றவில்லையா? தெருவுக்குள் உங்களவர் வரக்கூடாதென்று மற்ற ஜாதிக்காரர் ஏற்பாடு செய் திருப்பது பற்றி உனக்கு வருத்த முண்டாகவில்லையா?