பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியாரும் சமூகமும்

பாரதியார், சமூக சீர்திருத்தம் பற்றி எழுதிய சில கவிதைகள்

“குறிப்பு : பாரதியார் சமூக சீர்திருத்த வாதியாகவே தமது எழுத்துப் பணியைத் தொடங்குகிறார். ஆனால் மிக விரைவிலே,அவர் விடுதலைப்போராட்டத்திற்கு பிரம்மாஸ் திரம் போன்ற வலிமையையும் நெஞ்சுறுதியையும் தரக் கூடிய தேசீயப் பாடல்களை எழுதும் ஆற்றல்மிக்க கவிஞ ராகவும், உரைநடை எழுத்தாளராகவும், பேச்சாளராக வும் மலர்கிறார். அவ்வாறு மலர்ந்த போதும் சமூக சீர்திருத்தத்தைப் பற்றிக் கவிதையும் கட்டுரையும் எழுதிக் கொண்டுதாணிருந்தார். இந்தப் பணி பாரதியாரது இறுதி

மூச்சு உள்ள வரை நடைபெற்றதை இந்த நூலின் வாயிலாக அறியலாம்.

இந்த நூல் வரிசையிலே சில கவிதைகளை அவற்றின் பொருத்தம் நோக்கி ஒன்றிற்கு மேற்பட்ட இடங்களில் சேர்க்க வேண்டியதைத் தவிர்க்க முடியவில்லை. உரை

  • குறிப்பு என்று வருவதெல்லாம், தொகுப்பாசிரியர் சிந்தனைகளும் விளக்கங்களும் ஆகும்; பாரதியார் எழுதியவை அல்ல.