பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/203

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


188

நான் குளத்தில் குளித்தவர்களுடைய சம்பாஷணை யில் கவனம் செலுத்தினேன்.

நெட்டையன் சொல்லுகிருன்:- வேதபுரத்திலே வெங்காயக் கடைக்குப் பக்கத்து வீட்டிலே பெரியண்ண வாத்தியார் இருக்கிருரே, தெரியுமா? அவர் சோசியம் தப்பவே செய்யாது. அவர் எங்கள் தாத்தா செத்துப் போன நாள், மணி எல்லாம் துல்யமாகச் சொன்னர். பூமி வெடிக்காதென்றும், அது சீமைப் புளுகென்றும், அதை நம்பக்கூடாதென்றும் அவர் என்னிடம் பத்து நாளுக்கு முந்தியே சொன்னர். பெரியண்ண வாத்தியாங் நாளது பிங்கள வருஷ்த்துக்குச் சொல்லிய பலன்களை யெல்லாம் அப்படியே சொல்லுகிறேன், கவனமாகக் கேளுங்கள்.

பிங்கள வருஷத்தில் நல்ல மழை பெய்யும், நாடு செழிக்கும், நாட்டுத் தானியம் வெளியே போகாது. ஏழை களுக்குச் சோறு கொஞ்சம் அதிகமாகக் கிடைக்கும். பசு முதலிய நல்ல ஜந்துக்கள் விருத்தியாகும். துஷ்ட ஜந்துக் கள் எல்லாம் செத்துப் போகும். தேள், பாம்பு, நட்டுவாய்க்காலி முதலியவற்றின் பீடை குறையும்; பிணி குறையும்; துர்மரணமும், அகால மரணமும் குறையும் வெளித் தேசங்களில் சண்டை நடக்கும்; நம்முடைய தேசத்தில் சண்டை நடக்காமலே பல மாறுதல் ஏற்படும் ஜாதி பேதம் குறையும். ஆணுக்கும் பெண்ணுக்கும் படிப்பு விருத்தியாகும்; ஜனங்களுக்குள்ளே தைரியமும் பலமும், வீரியமும், தெய்வ பக்தியும் அதிகப்படும்; P முடைய தேசம் மேன்மையடையும் என்று பெரியண்ணி வாத்தியார் சொன்னதாக நெட்டையன் சொன்னன்.

‘நாராயணசாமி, கவனி’ என்றேன்.