பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/204

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


189

“பாமர ஜனங்களுடைய வார்த்தை’ என்று நாராயண ஸாமி சொன்னன்.

“தெய்வ வாக்கு’ என்று நான் சொன்னேன்.

பிறகு சிறிது நேரம் அந்தக் கோயிலில் சுகமாகப் பாட்டிலும் பேச்சிலும் பொழுது கழித்துவிட்டு வீட்டுக் குத் திரும்பி வந்து விட்டோம்.

37. மலையாளம்

18 1917

(குறிப்பு : ராகவ சாஸ்திரியின் கதை என்பது இந்தத் தேதியில் வெளி வந்துள்ளது. இவரை வைத்தே மலையாளம் (1), மலையாளம் (2), நம்பூரிகளும் தீயரும், மலையாளத்துக் கதை என்று மேலும் நான்கு கட்டுரைகள் பாரதியார் எழுதியுள்ளார்.

தீயர் எனப்படும் வகுப்பினரை எவ்வாறு முன்னேற்றம் அடைய முயற்சி நடைபெற்றது, அதற்கு முக்கிய காரணமாக இருந்த நாராயண குரு என்ற மகானைப் பற்றிய விவரம் ஆகிய வற்றை மட்டும், இந்தக் கட்டுரைகளிலிருந்து எடுத்து இங்கு தரப்படுகின்றது.

இழிந்தவர் என்பவர் யாரும் இல்லை. அவ் வாறு நினைத்துக்கொள்வதுதான் இழிவு.

ஸ்ரீ நாராயண குரு மிகுந்த தீரத்துடன் பலபணிகள் செய்தார். அவற்றின் விளைவாகப்