பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190

பல முன்னேற்றங்கள் ஏற்பட்டன என்பதை இக் கட்டுரைப் பகுதி காட்டுகிறது.

மற்றவர்களுக்கும் முன் மாதிரியாக இந்த முயற்சி அமைந்துள்ளது.) ‘நூறு கஜமுள்ள ஒரு பாலத்தின் இந்த ஒரத்தை ஒரு தீயன் தொட்டால், அந்த ஒரத்திலுள்ள நம்பூரி பிராமண னுக்குத் திண்டல் வந்து விடுகிறதாம்; மூட நம்பிக்கை அங்கே மிகவும் அதிகம்’ என்று பிரமராய அய்யர் மறுபடி வற்புறுத்திச் சொன்னர்.

அப்போது ராகவ சாஸ்திரி:-'அதெல்லாம் பண்டைக் காலத்தில். இப்போது மலையாளத்து நாயர்களும் தீயர்களும் பழைய வழக்கங்களை மாற்றுவதற்குப் பெரிய முயற்சிகள் செய்து வருகிறார்கள்.’

“ஆமாம், ஐயா, நான் கூடக் கேள்விப்பட்டேன். தீயர்களுக்கு சிவாலயங்கள் கட்டிக்கொடுத்து அவர்களை மற்ற ஹிந்துக்களைப் போலே செய்து நல்ல நிலைமைக்குக் கொண்டுவரவேண்டுமென்று ஸ்ரீ நாராயண ஸ்வாமி என்ற ஸந்நியாஸி ஒருவர் பாடுபடுகிறதாகவும், படிப்பு, ஒற்றுமை முதலிய நற்குணங்களில் தேர்ச்சி பெறும் பொருட்டு மலையாள முழுவதும் பல இடங்களில் தீயர் ஸ்மாஜங்கள் ஏற்பட்டிருக்கிறதாகவும் பத்திரிகைகளில் வாசித்திருக் கிறேன். அந்த நாராயண ஸ்வாமியின் வரலாறு என்ன கொஞ்சம் சொல்லும் எ ன் று வேதவல்லியம்மை கேட்டாள்.

ராகவ சாஸ்திரி சொல்லுகிறார்:

‘பரீ நாராயணஸ்வாமி என்பவர் தியர் ஜாதியில் பிறந்து பெரிய யோகியாய் மலையிலே தவஞ்செய்து கொண்டிருந்தார். அப்போது பல தியர் அவரிடம் போய் ஸ்வாமி, தங்களை மலையாளத்து மகாராஜாகூட மிகவும்