பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/207

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


19%

சிறு விரலை நீட்டிக்கொண்டு, “பெயரென்ன?” என்று கேட்டார்.

‘என் பெயர் நாணு என்று ஜனங்கள் சொல்லு வார்கள்” என்று நாராயண ஸ்வாமி சொன்னர்.

‘தீயர்களுக்கு கோயில் கட்டிக்கொடுக்கும் ஸ்ந்யாஸி நீர்தானே?” என்று நம்பூரி கேட்டார்.

“ஆம்” என்று ஸ்வாமி சொன்னர். பிராமணர் பிரதிஷ்டை செய்து பூஜிக்கவேண்டிய தெய்வத்தை நீர் பிரதிஷ்டை செய்யும்படி உமக்கு யார் அதிகாரம் கொடுத் தார்கள்?’ என்று நம்பூரி கேட்டார்.

அதற்கு நாராயணஸ்வாமி :-பிராமணர்களுடைய சிவனை நான் பிரதிஷ்டை செய்யவில்லை. நான் பிரதிஷ்டை செய்தது தீயர்களுடைய சிவன். இதில் தாங்கள் வருத்தப் படவேண்டாம். தங்களுடைய சிவன் வழிக்கே நாங்கள் வரவில்லை’ என்றார்.


நான் கேட்டேன், ‘சாஸ்திரியாரே, அந்த தீயர் ஸ்மாஜத்தின் பெயரென்ன?”

சாஸ்-'று நாராயண தர்ம பரிபாலன யோகம்’ ‘யோகம் என்றால் சபை என்று அர்த்தமா?” சாஸ்-'ஆம்” ‘அந்த சபை அங்கே, மலையாளத்தில் அதிகமாய்ப் பரவி யிருக்கிறததோ’ என்று நான் கேட்டேன்.

சாஸ்-'ஆம். அதில் ஸ்திரீகளினுடைய யோகம் என்ற பகுதி ஒன்றிருக்கிறது.’

“ஓஹோ புருஷர் ஸ்மாஜத்தைப்பற்றி முதலாவது பேசுவோம்’.என்றேன்.