பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/208

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


193

ராகவ சாஸ்திரி தொடங்கினர். ராகவ சாஸ்திரி சொல்லியது என்னவென்றால் :

மேற்படி ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன யோகத்துக்கு வட மலையாளத்தில், கண்ணனுார், மாஹி, கோழிக்கூடு முதலிய இடங்களிலும், தென் மலையாளத்தில்; திருவனந்த புரம், கொல்லம் முதலிய இடங்களிலும்; கொச்சி ராஜ்யத்திலும், மங்களுரிலும், மலையாள தேசம் முழுதிலு முள்ள முக்கிய ஸ்தலங்கள் எல்லாவற்றிலும் கிளைச் சபைகள் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன. சென்னைப் பட்டணத்தில் ஒரு கிளே இருக்கிறது. இந்த வருஷத்துப் பெருங்கூட்டம் சில மாதங்களின் முனபு திருவாங்கூரில் உள்ள ஆலுவாய் என்ற ஊரிலே நடந்தது. அப்போது பாலக்காட்டிலுள்ள விக்டோரியா காலேஜ் முதல் வாத்தியாராகிய ஸ்ரீமான் பி. சங்குண்ணி அக்ராஸ்னம் வஹறித்தார். இப்போது அவர் செய்த பிரசங்கத்தில் சில குறிப்பான வார்த்தைகள் சொன்னர். அவையாவன :

“நாம் பயப்படக்கூடாது. மனம் தளரக்கூடாது. மேற் குலத்தார் நம்மை எத்தனை விதங்களில் எதிர்த்தபோதிலும் நாம் அவர்களைக் கவனியாமல் இருந்து விடவேண்டும். எனக்குப் பாலக்காட்டில் அடிக்கடி கையெழுத்துச் சரியில்லாத மொட்டைக் கடிதங்கள் வந்து கொண்டிருந் தன. அந்தக் கடிதங்களில் நான் காலேஜ் வாத்தியராய் வேலையில் இருக்கக்கூடாதென்றும், அது பிராமணர் செய்ய வேண்டிய தொழில் என்றும், எனது முன்னேர் செய்த தொழில்களாகிய உழவு, விறகு வெட்டுதல், பனை யேறுதல் முதலியனவுமே நான் செய்யத்தக்க தொழில் களென்றும் பாலக்காட்டுப் பிராமணர் சொல்லுவதாகத் தெரிகிறது. இப்படிப்பட்ட வார்த்தைகளை நாம் கவனியாததுபோலே இருந்து விடவேண்டும். நாம் கீழ்