பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/211

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


196

கொன்று தீமை செய்துகொண்டே வரும். இதற்கு ஒய்வே கிடையாது. தர்மத்தாலும் கருணையாலும் எய்தப்படும் வெற்றியே நிலை பெற்று நிற்கவல்லதாகும். இதனை அறியாதார் உலக சரித்திரத்தையும் இயற்கையின் விதிகளை யும் அறியாதார் ஆவர்.’

வன்முறையைப் பாரதியார் ஏற்கவில்லை என்பதை அறிந்ததும் சிலருக்கு நிம்மதி ஏற்படக் கூடும். ஆதலால் அவர் கூறியுள்ள எண்ணங்களே மெதுவாகப் பார்த்துக் கொள்ளலாம் என்ற நினைப்பு வரும். இது பெருந்தவறு. சாதகமானதை வரவேற்றுவிட்டு மற்றதைப்பற்றி நினையாமல் இருப்பது பாதகம்.)

இங்கிலீஷ் நாகரீகம் நமது தேசத்தில் நுழையத் தொடங்கியதிலிருந்து, இங்கும் சில மூடர் பிச்சைக்காரரை வேட்டையாடுவது புத்திக்கூர்மைக்கு அடையாளமென்று நினைக்கிறார்கள். பிச்சைக்காரன் வந்தால், ஏண்டா தடி போலிருக்கிருயே: பிச்சைகேட்க ஏன் வந்தாய்? உழைத்து ஜீவனம் பண்ணு’ என்று வைது துரத்துவார்கள். ‘உழைத்து ஜீவனம் பண்ணு’ என்று வாயில்ை சொல்லி விடுதல் எளிது. உழைக்கத் தயாராக இருந்தாலும், வேல் யகப்படாமல் எத்தனை லக்ஷலக்ஷம்பேர் கஷ்டப்படுகிறார்கள் என்ற விஷயம் மேற்படி நாகரீக வேட்டை நாய்களுக்குத் தெரியாது.

சோம்பேறியாக இருப்பது குற்றந்தான். பிச்சைக்கு வருவோரில் பலர் மிகவும் கெட்ட சோம்பேறிகள் என்பதும் உண்மைதான். இதையெல்லாம் நான் மறுக்கவில்லே. ஆலுைம், பிச்சையென்று கேட்டவனுக்கு ஒரு பிடி அரிசி