பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/218

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


20

வீடு என்ற சொல்லுக்கு விடுதலை என்பது பொருள். வெளியில் எத்தனையோ அச்சங்களுக்கு ஹேதுக்கள் ா. அவ்விதமான அச்சங்கள் இல்லாமல் விடுதலைப்பட்டு வாழத் தகுந்த இடத்துக்கு வீடு என்ற பெயர் கொடுத் தனர் போலும். விடத்தக்கது வீடு’ என்ற பிற்கால உரை ஒப்பத்தக்கதன்று. விடத்தக்கது வீடு’ என்பது கற்றாேர் துணிபாயின், அக் கற்றேர் வீட்டில் குடியிருப்பது யோக்கியதையன்று; அவர்கள் காட்டில் சென்று வாழ்தல் தகும். குழந்தைகள் வீட்டையே அரணுகக் கருதுகிறார்கள். ஸ்திரீகளும் அப்படியே செய்கிறார்கள். இடைவயதிலுள்ள ஆண் மக்கள் பெரும்பாலும் வீட்டைக்காட்டிலும் வெளி இடங்களில் அதிக இன்பம் காண்கிறார்கள். இந்த விஷயத்தில், குழந்தைகள், ஸ்திரீகள் முதலியோர்களின் கொள்கையை ஆண்மக்கள் பின்பற்றுதல் தகும் என்று நம்புகிறேன். வீட்டிலிருந்து வெளியே ஒடிப்போய், வீட்டாருடன் கலகம் பண்ணிக்கொண்டு வாழ்வதே மேல் என்று கருதும் மக்களின் கூட்டங்களே பெரிய படைகளாய் உலகத்தில் பெரிய போர்களை நிகழ்த்தி, எண்ணற்ற துன்பங்களுக்கு இடமாகச் செய்கின்றன. வீடு துயரிடம் ஆவதற்குக் காரணம் விடுதலையும் அன்பும் இல்லாமையே. வீட்டில் அண்ணன் தம்பிகளையும் தாய் தந்தையரையும் அக்கா தங்கைகளையும் பெண்டு பிள்ளைகளையும் அடிமைப் படுத்தி ஆளச் சதிசெய்யும் ஜனங்களின் கூட்டங்களே, தேசங்களையும் அடக்கி அடிமையாக்கி ஆளச் சதி செய் கின்றன.

வீடு துன்பமாக இருப்பதின் மூலகாரணம் கணவனுக் கும் மனைவிக்கும் மனப் பொருத்தமில்லாமை. ஸ்திரி புருஷ ரோதத்தால் உண்டாகும் துன்பங்களே வீட்டுத் துன்புங் களுக்கெல்லாம் ஆதாரம்.