பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

sy

இவ்வரிசையில் முதல் நான்கு நூல்களுக்கு விரிவான முகவுரை மட்டும் எழுதினேன். ஆனல் பலர் விரும்பிக் (தட்டுக்கொண்டவாறு இவ்வரிசை ஐந்தாம் நூலிலிருந்து ஒவ்வொரு கவிதை அல்லது கட்டுரைக்கும் குறிப்பாக என்னுடைய கருத்தையும், ஆய்வுரை அல்லது ஏற்ற வேறு ால செய்திகளையும் எழுதி வெளியிடுகின்றேன். இப் புதிய முறையையே இந்நூலிலும் இனிவருகின்ற நூல்களிலும் பின்பற்றுவேன். எனது எண்ணங்களை ஆங்காங்குக் கூறு வதற்கு ஒரு வாய்ப்பாகவும் இம்முறை அமைந்துள்ளதை நான் பெரிதும் விரும்புகின்றேன்.

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள். குறிப்பு ஆங்காங்கே இருப்பதால் முன்னுரையைப் படிக்கவேண்டிய தில்லை யென்று தயவுசெய்து எண்ணுதிர்கள். அதிலும்இந்த வரிசைபற்றிய சில முக்கியமான தகவல்களும், சமூக சீர்திருத்தம் பற்றிய பாரதியாரின் முடிவான சிந்தனைத் தொகுப்பும் இருக்கின்றன. ஆகவே எதையும் ஒதுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். ஒவ்வொரு பாரதி நூலுக்கும் முன்னுரையோடு அணிந்துரை யிருப்பதையும் காணலாம். அறிஞர் பலரின் சீரிய சிந்தனை களும் அதில் இடம் பெற்றுள்ளன.

எனது தாய்காட்டின் முன்னட் பெருமையும்

இந்நாட் சிறுமையும்

(குறிப்பு : இப்பாடல் 11 ஏப்ரல் 1906-இல் சுதேச மித்திரனில் வெளியாயிற்று. இன்னும் வரும் என்று இப் பாடலின் இறுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. திரு. எஸ். ஜி. இராமாநுஜலு நாயுடு அவர்களும், தமது பத்திரிகையாகிய அமிர்தகுண போதினியில், சென்று போன நாட்கள்’