பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/221

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


206

அது தேசீயம் என்ற பதத்தின் பொருளுக்கு முழுதும் விரோதமாக முடியுமென்பதில் ஐயமில்லை. தே, பாஷையே ப்ரதானம் என்பது தேசீயக்கல்வியின் ஆதார: கொள்கை; இதை மறந்துவிடக்கூடாது. தேச பாஷையை விருத்தி செய்யும் நோக்கத்துடன் தொடங்கப்படுகிற இந்த முயற்சிக்கு நாம் தமிழ் நாட்டிலிருந்து பரிபூர்ண ஸ்ஹாயத்தை எதிர்பார்க்க வேண்டுமானல், இந்த முயற்சிக்குத் தமிழ் பாஷையே முதற் கருவியாக ஏற்படு: தப்படும் என்பதைத் தம்பட்டம் அறைவிக்க வேண்டும் இங்ஙனம் தமிழ் ப்ரதானம் என்று நான் சொல்லுவதால், டாக்டர் நாயரைத் தலைமையாகக் கொண்ட திராவிடச் கrயார் என்ற போலிப் பெயர் புனைந்த தேச விரோதி களுக்கு நான் சார்பாகி, ஆர்யபாஷா விரோதம் பூண்டு பேசுகிறேன் என்று நினைத்துவிடலாகாது. தமிழ் நாட்டிலே தமிழ் சிறந்திடுக. பாரத தேசமுழுதிலும் எப்போதும் போலவே வடமொழி வாழ்க. இன்னும் நாம் பாரத தேசத்தின் ஐக்கியத்தைப் பரிபூர்ணமாகச் செய்யுமாறு நாடு முழுவதிலும் வடமொழிப் பயிற்சி மேன்மேலும் ஒங்குக. எனினும், தமிழ் நாட்டில் தமிழ்மொழி தலைமை பெற்றுத் தழைத்திடுக.

ஆரம்பப் பள்ளிக்கூடம்

உங்களுடைய கிராமத்தில் ஒரு பாடசாலை ஏற்படு: துங்கள். அல்லது. பெரிய கிராமமாக இருந்தால் இரண் மூன்று வீதிகளுக்கு ஒரு பள்ளிக்கூடம் வீதமாக எத்தன் பள்ளிக்கூடங்கள் ஸாதியமோ அத்தனை ஸ்தாபன செய்யுங்கள். ஆரம்பத்தில், மூன்று உபாத்தியாயர்கள் வைத்துக்கொண்டு ஆரம்பித்தால் போதும். இவர்களுக்கு சம்பளம் தலைக்கு மாஸம் ஒன்றுக்கு 30 ரூபாய்க்கு குறையாமல் ஏற்படுத்தவேண்டும். உபாத்தியாயர்க!