பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/222

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


207

பி. ஏ., எம். ஏ. பட்டதாரிகளாக இருக்கவேண்டிய அவசியமில்லை. மெட்றிகுலேஷன் பரீகை தேறினவர் gen 8 இருந்தால் போதும். மெட்றிகுலேஷன் ரீஷைக்குப் போய் தவறினவர்கள் கிடைத்தால் மிகவும் நல்லது. இந்த உபாத்தியாயர்களுக்கு தேச பாஷையில் நல்ல ஞானம் இருக்க வேண்டும். திருஷ்டாந்தமாக, இங்ஙனம் தமிழ்நாட்டில் ஏற்படும் தேசீயப் பாடசாலை அளில் உபாத்தியாயராக வருவோர் திருக்குறள், நாலடியார் முதலிய நூல்களிலாவது தகுந்த பழக்கம் உடையவர் களாக இருக்கவேண்டும். சிறந்த ஸ்வதேசாபிமானமும், ஸ்வதர்மாபிமானமும், எல்லா ஜீவர்களிடத்திலும் கருனே பும் உடைய உபாத்தியாயர்களைத் தெரிந்தெடுத்தல் நன்று. அங்ஙனம் தேசபக்தி முதலிய உயர்ந்த குணங்கள் ஏற்கெனவே அமைந்திராத உபாத்தியாயர்கள் கிடைத்த போதிலும், பாடசாலை ஏற்படுத்தும் தலைவர்கள் அந்த உபாத்தியாயர்களுக்கு அந்தக் குணங்களைப் புகட்டுவதற் குரிய ஏற்பாடுகள் செய்யவேண்டும். ஆரோக்கியமுந் திடசரீரமுமுடைய உபாத்தியாயர்களைத் தெரிந்தெடுப்பது நன்று.

பாடங்கள்

(அ) எழுத்து, படிப்பு, கணக்கு. (ஆ) இலேசான சரித்திரப் பாடங்கள்.

வேதகால சரித்திரம், புராண கால சரித்திரங்கள், பெளத்த காலத்துச் சரித்திரம், ராஜபுதனத்தின் சரித்திரம் இவை மிகவும் சிரத்தையுடன் கற்பிக்கப்படவேண்டும். பள்ளிக்கூடம் ஏற்படுத்தப்போகிற கிராமம் அல்லது டிடணம் எந்த மாகாணத்தில் அல்லது எந்த ராஷ்ட் ததில் இருக்கிறதோ, அந்த மாகாணத்தின் சரித்திரம்