பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



பாரத பூமி சாஸ்த்ரம், இந்தியாவிலுள்ள மாகாணங் கள், அவற்றுள் அங்கு ஸ் ள தேச பாஷைகளின் வேற்றுமைக்குத் தகுந்தபடி இயற்கையைத் தழுவி ஏற் படுத்தக்கூடிய பகுதிகள்-இவை விசேஷ சிரத்தையுடன் கற்பிக்கப் படவேண்டும். வெளி மா கா ண ங் க ளை . குறித்துப் பின்வரும் அம்சங்களில் இயன்றவரை விஸ்தார மான ஞானமுண்டாக்க வேண்டும்: அதாவது, பாரத பூமி சாஸ்த்ரத்தில், மற்ற மாகாணங்களில் வசிக்கும் ஜனங்கள், அங்கு வழங்கும் முக்கிய பாஷைகள், முக்கியமான ஜாதிப் பிரிவுகள், தேச முழுமையும் வகுப்புக்கள் ஒன்றுபோலிருக் கும் தன்மை, மத ஒற்றுமை, பாஷைகளின் நெருக்கம், வேத புராண இதிஹாஸங்கள் முதலிய நூல்கள் பொதுமைப்பட வழங்குதல், இவற்றிலுள்ள புராதன ஒழுக்க ஆசாரங்களின் பொதுமை, புண்ணிய rேத்திரங்கள், அவற்றின் தற்கால நிலை, இந்தியாவிலுள்ள பெரிய மலைகள், நதிகள் இந்தியாவின் விளைபொருள்கள், அளவற்ற செல்வம், ஆஹார பேதங்கள், தற்காலத்தில் இந்நாட்டில் வந்து குடியேறியிருக்கும் பஞ்சம் தொத்து நோய்கள் இவற்றின் காரணங்கள், ஜல வஸ்திக் குறைவு, வெளி நாடுகளுக்கு ஜனங்கள் குடியேறிப்போதல்-இந்த அம்சங்களைக் குறித்து மாளுக்கருக்குத் தெளிவான ஞானம் ஏற்படுத்தப்பட வேண்டும்.

பாரத தேசத்தின் அற்புதமான சிற்பத் தொழில்கள் கோயில்கள், இவற்றைப்பற்றி மாணக்கருக்குத் தெரிவிக்க வேண்டும்.

உங்கள் சொந்த ராஷ்ட்ரம் அல்லது மாகாணத்தின் பூமி சாஸ்திரம்.

இது கற்றுக்கொடுப்பதில், ஜனப்பாகுபாடுகளைப் பற்றிப் பேசுமிடத்து, ஹிந்துக்கள் மகம்மதியர்கள் என்