பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212

என்று கற்பிப்பதுடன், இதர தெய்வங்களைப் பழித்தல், பகைத்தல் என்ற மூடச் செயல்களை கட்டோடு விட்டு விடும்படி போதிக்கவேண்டும். ஏகம் ஸத் விப்ரா: பஹாதா வதந்தி (கடவுள் ஒருவரே, அவரை ரிஷிகள் பல பெயர்களால் அ ைழ க் கி ன் ற ன ர்) என்ற ரிக்வேத உண்மையை மாணுக்கரின் உள்ளத்தில் ஆழப் பதியுமாறு செய்யவேண்டும். மேலும், கண்ணபிரான் எல்லர் உடம்புகளிலும் நானே உயிராக நிற்கிறேன்’ என்று கீதை யில் கூறியபடி, ஈ, எறும்பு, புழு, பூச்சி, யானை, புலி, கரடி, தேள், பாம்பு, மனிதர்-எல்லா உயிர்களும் பரமாத்மா வின் அம்சங்களே என்பதை நன்கறிந்து, அவற்றை மனமொழி மெய்களால் எவ்வகையிலும் துன்புறுத்தாமல், இயன்ற வழிகளிலெல்லாம் அவற்றிற்கு நன்மையை செய்துவர வேண்டும்’ என்பது ஹிந்துமதத்தின் மூல தர்மம் என்பதை மாளுக்கர்கள் நன்முக உணர்ந்து கொள்ளும்படி செய்யவேண்டும். மாம்ஸ் போஜனம் மனிதன் உடல் இறைச்சியைத் தின்பதுபோலாகும் என்றும், மற்றவர்களைப் பகைத்தலும் அவர்களைக் கொல்வதுபோலே யாகும் என்றும் ஹிந்து மதம் கற்பிச் கிறது. எல்லாம் பிரம்ம மயம்’, ‘ஸர்வம் விஷ்ணுமயம் ஜகத் என்ற வசனங்களால் உலக முழுதும் கடவுளின் வடிவமே என்று ஹிந்து மதம் போதிக்கிறது. இங்ஙனம் எல்லாம் கடவுள்மயம் என்றுணர்ந்தவன் உலகத்தில் எதற்கும் பயப்படமாட்டான்,எங்கும் பயப்பட மாட்டான். எக் காலத்திலும் மாருத ஆனந்தத்துடன் தேவர்களைப் போல் இவ்வுலகில் நீடுழி வாழ்வான்’ என்பது ஹிந்தி மதத்தின் கொள்கை. இந்த விஷயங்களெல்லாம் மாஞ்

கருக்கு தெளிவாக விளங்கும்படி செய்வது உபாத்தி யாயர்களின் கடமை. மத விஷயமான போராட்டங்சி எல்லாம் சாஸ்த்ர விரோதம்; ஆதலால், பரம மூடத்தன.