பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/231

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


216

தொழிலாளிகள் பலர் கூடிச்செய்யும் தொழிலே அதிக நன்மையைத் தருவதாகும்.

செல்வம் ஒரு நாட்டில் சிலருக்கு வசப்பட்டதாய் பலர் ஏழைகளாக இருக்கும்படி செய்யும் வியாபார முறைகளைக் காட்டிலும், சாத்தியப்பட்டவரை அநேகரிடம் பொருள் விரவியிருக்கும்படி செய்யும் வியாபார முறைகள் மேன்மை யாக பாராட்டத்தக்கனவாம்.

(எ) லயன்ஸ் அல்லது பெளதிக சாஸ்திரம்

ஐரோப்பிய ஸயன்ஸின் ஆரம்ப உண்மைகளைத் தக்க கருவிகள் மூலமாகவும் பரீகூைடிகள் மூலமாகவும் பிள்ளை களுக்கு கற்பித்துக்கொடுத்தல் மிகவும் அவசியமாகும். பிள்ளைகளுக்கு தாங்களே ஸயன்ஸ் சோதனைகள் செய்து பார்க்கும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும் வியாபார விஷயங்களுக்கு ரஸாயன சாஸ்திரம் மிகவும் பிரதானமாகையால், ரஸ்ாயனப் பயிற்சியிலே அதிக சிரத்தை காண்பிக்க வேண்டும். கண்ணுக்குத் தெரியாதி நுட்பமான பூச்சிகள் தண்ணிர் மூலமாகவும், மண்முல் மாகவும் பரவி நோய்களைப் பரப்புகின்றன என்ற விஷயம் ஐரோப்பிய ஸயன்ஸ் மூலமாக கண்டுபிடிக்கப்பட்டிருப் பதில் ஒரு சிறிது உண்மை இருப்பது மெய்யேயாயினும் மனம் சந்தோஷமாகவும் ரத்தம் சுத்தமாகவும் இருப்பவன் அந்தப் பூச்சிகள் ஒன்றும் செய்யமாட்டா என்பதிை: ஐரோப்பியப் பாடசாலைகளில் அழுத்திச் சொல்லவில்ன் அதல்ை, மேற்படி சாஸ்திரத்தை நம்புவோர் வாழ்நாள் முழுதும் ஸ்ந்தோஷமாய் இராமல் தீராத நரக வாழ்க்'ை வாழ்கிறார்கள். ஆதலால், நமது தேசீய ஆரம்பப் பா’ சாலையில் மேற்படி பூச்சிகளைப்பற்றின பயம் மாகு கருக்குச் சிறிதேனும் இல்லாமல் செய்துவிட வேண்டும்