பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

217

உலகமே காற்றாலும், மண்ணுலும், நீராலும் சமைந் திருக்கிறது. இந்த மூன்று பூதங்களை விட்டு விலகி வாழ பாராலும் இயலாது. இந்த மூன்றின் வழியாகவும் எந்த நேரமும் ஒருவனுக்கு பயங்கரமான நோய்கள் வந்துவிடக் கூடும் என்ற மஹா நாஸ்திகக் கொள்கையை நவீன ஐரோப்பிய சாஸ்திரிகள் தாம்நம்பி ஓயாமல் பயந்துபயந்து மடிவது போதாதென்று, அந்த மூடக்கொள்கையை நமது தேசத்தின் இளஞ்சிறுவர் மனதில் அழுத்தமாகப் பதியும் படி செய்துவிட்டார்கள். சிறு பிராயத்தில் ஏற்படும் அபிப்பிராயங்கள் மிகவும் வலிமை உடையன, அசைக்க முடியாதன, மறக்கமுடியாதன; எனவே, நமது நாட்டிலும் இங்கிலீஷ் பள்ளிக்கூடங்களில் படித்த பிள்ளைகள் சாகு மட்டும் இந்தப் பெரும்பயத்துக்கு ஆளாய் தீராத கவலை கொண்டு மடிகிரு.ர்கள். பூச்சிகளால் மனிதர் சாவதில்லை; நோய்களாலும் சாவதில்லை; கவலையாலும் பயத்தாலும் சாகிரு.ர்கள். இந்த உண்மை நமது தேசீயப் பள்ளிக் கூடத்துப் பிள்ளைகளின் மனதில் நன்முக அழுந்தும்படி செய்யவேண்டும்.

பெளதிக சாஸ்த்ரங்கள் கற்றுக் கொடுப்பதில், மிகவும் தெளிவான எளிய தமிழ் நடையில் பிள்ளைக்கு மிகவும் ஸ்சலபமாக விளங்கும்படி சொல்லிக்கொடுக்க வேண்டும். இயன்ற இடத்திலெல்லாம் பதார்த்தங்களுக்குத் தமிழ்ப் பெயர்களையே உபயோகப்படுத்த வேண்டும். திருஷ்டாத்த மாக, ஆக்ஸிஜன்”, “ஹைட்ரஜன்”, முதலிய பதார்த் தங்களுக்கு ஏற்கெனவே தமிழ் நாட்டில் வழங்கப்பட் டிருக்கும் பிராணவாயு, ஜலவாயு என்ற நாமங்களையே வழங்கவேண்டும். தமிழ்ச் சொற்கள் அகப்படாவிட்டால் ஸ்மஸ்கிருத பதங்களை வழங்கலாம். பதார்த்தங்களுக்கு மட்டுமேயன்றிக் கிரியைகளுக்கும் அவஸ்தைகளுக்கும் (நிலைமைகளுக்கும்) தமிழ் சமஸ்கிருத மொழிகளையே வழங்