பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220

கப் பயிற்சி யுடைவர்களுமான அனுபவஸ்தர்களைக் கொண்டு ஆரம்பப்பயிற்சி ஏற்படுத்திக் கொடுத்தல் மிகவும் நன்மை தரக்கூடிய விஷயமாகும்.

(ஐ) சரீரப் பயிற்சி

தோட்டத்தொழில்கள், கிணறுகளில் ஜலமிறைத்தல் முதலியவற்றால் ஏற்படும் சரீரப் பயிற்சியே மிகவும் விசேஷ மாகும். பிள்ளைகளுக்குக் காலேயில் தாமே ஜலமிறைத்து ஸ்நானம் செய்தல், தத்தம் வேஷ்டி துணிகளைத் தோய்த்தல் முதலிய அவசியமான கார்யங்களில் ஏற்படும் சரீரப் பயிற்சியும் நன்றேயாம். இவற்றைத் தவிர, ஒட்டம், கிளித்தட்டு, சடுகுடு முதலிய நாட்டு விளையாட்டுகளும், காற்பந்து (Foot ball) முதலிய ஐரோப்பிய விளையாட்டு களும், பிள்ளைகளுடைய படிப்பில் பிரதான அம்சங்களாகக் கருதப்பட வேண்டும். குஸ்தி, கஸ்ரத், கரேலா முதலிய தேசீயப் பயிற்சிகளும் இயன்றவரை அனுஷ்டிக்கப்படலாம். ஐரோப்பிய முறைப்படி பிள்ளைகளைக் கூட்டமாகக் கூட்டி, கபாத்து (ட்ரில்) பழக்குவித்தல் இன்றியமையாத அம்ச மாகும். ஸெளகர்யப்பட்டால் இங்கிலீஷ் பள்ளிக்கூடங் களில் பயிற்றுவிக்கும் மரக்குதிரை, ஸ்மக் கட்டைகள் (parallel bars), @b6DA03 GL55) – (horizontal bar) முதலிய பழக்கங்களும் செய்விக்கலாம். படிப்பைக் காட்டிலும் விளையாட்டுக்களில் பிள்ளைகள் அதிக சிரத்தை எடுக்கும்படி செய்ய வேண்டும். சுவரில்லாமல் சித்திர மெழுத முடியாது. பிள்ளைகளுக்கு சரீரபலம் ஏற்படுத் தாமல் வெறுமே படிப்பு மாத்திரம் கொடுப்பதால், அவர் களுக்கு நாளுக்குநாள் ஆரோக்யம் குறைந்து, அவர்கள் படித்த படிப்பெல்லாம் விழலாகி, அவர்கள் தீராத துக்கத் துக்கும் அற்பாயுகக்கும் இரையாகும்படி நேரிடும்.