பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

221

(ஒ) யாத்திரை (எக்ஸ்கர்ஷன்)

பிள்ளைகளை உபாத்தியாயர்கள் பக்கத்துரர்களிலும் தமதுாரிலும் நடக்கும் உற்சவங்கள் திருவிழாக்கள் முதலிய வற்றுக்கு அழைத்துச் சென்று, மேற்படி விழாக்களின் உட் பொருளைக் கற்பித்துக் கொடுத்தல் நன்று. திருவிழாவுக்கு வந்திருக்கும் பலவகை ஜனங்களின் நடையுடை பாவனை களைப் பற்றிய ஞானம் உண்டாகும்படி செய்யவேண்டும். வனபோஜனத்துக்கு அழைத்துச் செல்லவேண்டும். அங்கு பிள்ளைகள் தமக்குள் நட்பும், அன்பும், பரஸ்பர ஸம்பா ஷணையில் மகிழ்ச்சியும் எய்தும்படி ஏற்பாடு செய்ய வேண்டும். மலைகள் கடலோரங்களுக்கு அழைத்துச் சென்று, இயற்கையின் அழகுகளையும் அற்புதங்களேயும், பிள்ளைகள் உணர்ந்து மகிழும்படி செய்யவேண்டும். பல விதமான செடி கொடிகள், மரங்கள், லோஹங்கள், கல்வகைகள் முதலியவற்றின் இயல்பைத் தெரிவிக்க வேண்டும்

பொதுக் குறிப்புகள்

மேலே காட்டிய முறைமைப்படி தேசீயப் பள்ளிக்கூடம் நடத்துவதற்கு அதிகப் பணம் செலவாகாது. மாஸம் நூறு ரூபாய் இருந்தால் போதும். இந்தத் தொகையை ஒவ்வொரு கிராமத்திலுள்ள ஜனங்களும் தமக்குள்ளே சந்தா வசூலித்துச் சேர்க்கவேண்டும். செல்வர்கள் அதிகத் தொகையும், மற்றவர்கள் தத் தமக்கு இயன்றளவு சிறு தொகைகளும் கொடுக்கும்படி செய்யலாம். 100 ரூபாய் வசூல் சேய்ய முடியாத கிராமங்களில் 50 ரூபாய் வசூலித்து பாத்தியாயர் மூவருக்கும் தலைக்கு மாஸச் சம்பளம் 12 போய் கொடுத்து, மிச்சத் தொகையை பூகோளக் *ருவிகள், “ஸயன்ஸ் கருவிகள், விவசாயக் கருவிகள் 9தலியன வாங்குவதில் உபயோகப்படுத்தலாம். 100