பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



(4) 24-2-1906—"argror கொடுமை என்ற தலைப்பில் வெளியானது, இரண்டு ரஜபுத்திரர்கள் செய்த அற்புதமான துப்பாக்கி வித்தைகளைப் பாராட்டி எழுதிய கவிதை. முன் காலத்தில் அர்ஜூனன் காட்டிய வில் திறமையெல்லாம் மறந்து போய், இன்று.

வீமன் திறலு மவற்கிள்ைய

விஜயன் திறலும் விளங்கிநின்ற சேம மணிப்பூந் தடநாட்டில்

சிறிய புழுக்கள் தோன்றி வெறுங் காம நுகர்தல் இரந்துண்ணல்

கடையாம் வாழ்க்கை வாழ்ந்து பினர் ஈமம் புகுதல் இவை புரிவார்

என்னே கொடுமை ஈங்கிதுவே என்று மகாகவி அங்கலாய்க்கிறார். துப்பாக்கி வித்தைகளைப் பார்த்ததும் உள்ளத்திலே இந்த எண்ணங்கள் எழுந்தன வாம்.

தாய் நாட்டின் பழம் பெருமையையும் இன்றைய சிறுமையையும் 11-4-1906-இல் கவிதையாக வடித்துள் ளார். ஆகவே இப்பாடல் ஐந்தாவதாக மித்திரனில் வெளி வந்ததாகும். வங்க வாழ்த்துக் கவியே சுதேசமித்திரனில் வெளியான முதற் பாடலாகக் காண்கிறது. “தனிமை இரக்கம் போன்ற கவிதைகள் முன்பே வெளியாகி யிருந்தாலும், மித்திரனில் வெளிவந்தவற்றையே இங்கு நான் குறிப்பிடுகிறேன். அந்த ஆராய்ச்சி இங்கு வேண்டு வதில்லை.

திரு. இராமாநுஜலு நாயுடு அவர்கள், தொடர்ச்சியாக இந்த மகுடமிட்டு எழுதினர் என்று கு றிப்பிட்டிருந்தாலும்,

இப்பகுதி தவிர வேறென்றும் எனக்குக் கண்டுபிடிக்க இயல வில்லை.