பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226

படுகின்றன. அங்கு கற்பன சக்தியும், சிற்பம் முதலிய கலைகளும் தலைமையாகக் கொண்ட கல்வியே பயிற்றப் படுகிறது. இதன் காரணம், இங்கிலாந்தில் பயிர் விளைவு குறைவு; ஆதலால், அநேக ஜனங்கள் வெளித்தேசங்களில் குடியேறி ஜீவனம் செய்தல் அவசியமாகிறது; அதற்குரிய குணங்களை ஆங்கிலக் கல்வி முக்கியமாகக் கருதுகிறது. அமெரிக்காவில், ஜனதிகாரமே மேலான ராஜ்ய தர்ம மென்றும், எத்தனை பெரிய ஏழையும் எத்தனை பெரிய செல்வனும் தம்முள் ஸ்மமேயன்றி அவர்களில் ஏற்றத் தாழ்வு கிடையாதென்றும், பிறரைச் சார்ந்து நிற்காமல் தன்மதிப்புடன் பிழைக்கத்தகுந்த கூலி தரும் எவ்விதமான கைத்தொழிலிலும் அவமானத்துக்கு இடமில்லையென்றும் பாடசாலைகளில் முக்கிய போதனையாகக் கற்பிக்கிறார்கள். இந்தியாவில் மாத்திரம் சுதேசியக் கல்வி இல்லை. இந் நாட்டுக் கல்வி முழுதும் பிரிட்டிஷ் குணமுடையதாக இருக்கிறது. ஒரு வாரத்தில் இரண்டு மூன்று மணிநேரம் ஹிந்துதேச சரித்திரமும் தேசபாஷைகளும் கற்றுக்கொடுத் தால் போதாது. அதிணின்றும் சுதேசீய ஞானம் ஏற்படாது. சென்னையில் பிரெஸிடென்ஸி காலேஜ்’ என்று சொல்லப்படும் மாகாணக் கலாசாலையின் கட்டடம் நமது தேசமுறையைத் தழுவியதன்று. பழைய இத்தாலி வழி யொன்றை அனுஸரித்தது. இங்கிலாந்தில் க்ஆஸ்போர்ட் கேம்பிரிட்ஜ் ஸங்கங்களின் கட்டிடம் இத்தாலி முறையிலா கட்டியிருக்கிரு.ர்கள்? அதுபோலவே, பாரததேச முறைமைப் படி கட்டிய கட்டிடங்களில் கற்றுக்கொடுக்காத கல்வி இங்கு சுதேசீயக் கல்வி என்று சொல்லத்தகுந்த யோக்யதை பெருது.”

இது ஜினராஜதாஸர் சில தினங்களின் முன்பு சென்னைப் பத்திரிகைகளில் பிரசுரம் செய்திருக்கும் ஒரு வ்யாஸத்தின் ஸாரமாம். இதில் கடைசி அம்சம் மிகவும்