பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

229

மனிதனுக்கு ஸாத்தியமில்லை. விதியின் வலிமை சாலவும் பெரிது. ஆனல் விதி இப்போது தேசீயக்கல்வி முயற்சிக்கு அநுகூலமான காலத்தை ஏற்படுத்திக் கொடுத் திருக்கிறது என்ற செய்தியை மீர்ஜா ஸ்மி உல்லா நம் நாட்டாருக்கு நினைப்பூட்டுகிரு.ர்.

‘காளயுக்தி’ என்பது காலயுக்தி; அதாவது காலப் பொருத்தம். காலம் இந்த வர்ஷத் தொடக்கத்தில் எந்தப் பெருஞ் செயலுக்கும் மிகவும் பொருத்தமாகத் தோன்று கிறது.

பகவத் கீதையில் துர்க்காஸ்துதி முதலிய சில அம்சங்கள் சேர்ந்தும், ஹம்ஸ் யோகி என்பவரின் ‘கீதா ரஹஸ்யம் என்னும் உரைநூலில் கூறப்பட்டதைத் தழுவி 18 அத்யாயக் கணக்கை 24 அத்யாயமாக மாற்றியும், சென்னை சுத்த தர்ம மண்டலத்தார் ஒரு புதிய பதிப்புப் போட்டிருக்கிறார்கள்.

இதற்கு நீதி நிபுண மணி அய்யர் ஒரு முகவுரை எழுதி யிருக்கிறார். அந்த முகவுரையில் சக்தி தர்மத்தை மிகவும் உயர்த்திக் கொண்டாடுகிரு.ர்.

இப்படிப்பட்ட மணி அய்யரும் அணி பெஸண்ட் அம்மையும் கலந்து நடத்தும் தேசீயக்கல்வி முயற்சியில் பெண்களின் ஆதிக்கம் மேன்மேலும் ஓங்கி வளரும் என்பது சொல்லாமலே விளங்கும்.

மேற்பதிப்பின் முதல் ஏட்டின் முதுகுப் புறத்தின் தலைப்பில் ஒம் நம: ஸ்ரீ பரமர்ஷிப்யோ யோகிப்ய: (யோகிகளாகிய தலைமை முனிவரைப் போற்றுகிருேம் ஒம்) என்று அச்சிட்டு, அடியில்,

‘'ஸ்ரீம்; ஸ்ரைம்; ஸ்ரைம்: ஒம்-தாஸ் :

என்ற மந்திரங்கள் பொறிக்கப்பட்டிருக்கின்றன.

LT