பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230

இம் மந்திரங்களின் பொருள் யாதெனில்

ஸ்ரீம்-லக்ஷ்மியை (பூ திரு. என்றவை ஒரு மொழியின் வடிவங்கள்) பஸ்ரைம்-ஆச்ரயிக்கிறேன், சார்ந்து நிற்கிறேன்;

ஆதலால், ஸ்ரைம்-அசைகிறேன்,

ஒம்-ப்ரணவப்=ப்ர-நவம்=மேன்மேலும் புதியநிலை;

எப்போதும் rணந்தோறும் புதிய புதிய உயிருடன் என்றும் அழியாத அமிர்த நிலை பெற்று விளங்குவேன்.

தாஸ்:=அடியேன்.

இப் பொருளுடைய மந்திரங்களே துர்க்காஸ்துதி சேர்ந்த கீதைப் பதிப்புடன் ஆரம்பத்தில் போட்டது மிகவும் பொருத்த முடைய செய்கையேயாம்.

மஹா சக்தியே தாய் அல்லது மனைவி வடிவத்தில் மனிதன் உயிருக்குத் துணைபுரிகிருள். ஆதலால் பெண்ணை ஆச்ரயித்த வாழ்க்கையே தேவவாழ்க்கை. ‘வந்தே மாதரம்’ என்பதும், ‘ஓம் ஸ்ரீம்’ என்பனவும் நம்முடைய தேசக் கல்விச் சாலைகளின் வாயிற்கதவுகளிலும் கொடி களிலும் பொறிக்கத்தக்க மந்திரங்களாம்.

மேலும் அந்த பதிப்பின் மூன்றாம் ஏட்டின் முதுகு. புறத்தைத் திருப்பினால், அதில், நான்கு குதிரைகள் பூட்டிய தேரைக் கண்ணன் நடத்த, அதில் அர்ஜூனன் வீற்றிரு. பதைப்போல் சித்திரம் வரையப்பட்டிருக்கிறது; இஃது ஆண் மக்கள் ஒருவருக்கொருவர் நட்புச் செலுத்த வேண்டிய நெறியைக் காட்டுவது.