பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232

மேலாக வாழ்வதால், ஹிந்து ஜாதியராகவே கருதத் தக்கவர் ஆவர். எங்ஙனமெனில், ஜப்பானில் பிறந்தவன் ஜப்பானியன்: சீனத்தில் பிறந்தவன் சீனன். ஹிந்து தேசத்தில் பிறந்தவன் ஹிந்து; இதர தேசங்களில் தேச எல்லையே ஜாதி எல்லையாகக் காணப்படுகிறது, இந்த நாட்டிலும் அதே மாதிரி ஏன் செய்யக்கூடாது?

இந்தியா, இந்து, ஹிந்து மூன்றும் ஒரே சொல்லின் திரிபுகள். இந்தியாவில் பிறந்தவன் இந்திய ஜாதி அல்லது ஹிந்துஜாதி.

(2) கிறிஸ்தவர்.

தேசீயக் கல்வி முயற்சிகளில் சேரக்கூடாதென்று ஒரு. சில மூடப் பாதிரிகள் சொல்லக்கூடும். அதை ஹிந்துக் கிறிஸ்தவர் கவனிக்கக்கூடாது. தேசீயக் கல்வியில், ரிக்வேதமும், குரானும், பைபிலும் ஸ்மானம். கிறிஸ்து, கிருஷ்ணன் என்பன பர்யாய நாமங்கள். வங்காளத்தில் ஹிந்துக்கள் கிருஷ்ணதாஸ் பாலன் என்று சொல்வதற்குக் கிறிஸ்தோதாஸ் பால் என்று சொல்கிறார்கள்.

(3) மனுஷ்யத்தன்மை.

ஆங்கிலேயர், பிராமணர், ஆஸ்திரேலியாவில் முந்தி வேட்டைகளில் அழிக்கப்பட்ட புதர்ச்சாதியார் (Bushmer) -எல்லாரும் பொதுவில் மனிதர் ஆதாம் ஏவாவழியில் பிறந்தவர்கள்’ என்று கூறி, முஹம்மதியக் கிறிஸ்தவ வேதங்கள் மனிதர் எல்லோரும் ஒன்று என்பதிை உணர்த்துகின்றன. மஹாபாரதத்தில், மனிதர் தேவர். புட்கள், பாம்புகள் எல்லோருமே காச்யப ப்ராஜபதியின் மக்களாதலால் ஒரே குலத்தார் என்று சொல்லப்பட்டிருச் கிறது.