பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

235

விட்டுத் திரும்பிக் கடயத்தில் கொஞ்சகாலம் தங்கியிருந்து மீண்டும் பாரதியார் சுதேசமித்திர தில் உதவி ஆசிரியராகப் பணி ஏற்றுக்கொண்டு சென்னையில் வாழ்ந்தார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

சமூக சீர்திருத்தத்தில் தாம் முதன்முதல் சுதேசமித்திரனில் நியமனம் பெற்ற காலத்தில் எவ்வளவு ஆர்வம் இருந்ததோ, அதிற் சிறிதளவும் குறையாமல் பாரதியார் தமது இறுதி நாள் வரை யிலும் இருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.

இந்த ஆசார சீர்திருத்த மஹா சபை இதற்கு முன்பே இருபத்திரண்டு ஆண்டுகள் நடை பெற்றிருக்கிறது. இவ்வளவு நீண்ட காலத்திலும், இது நடை முறையில் என்ன சாதித்திருக்கிறது என்று கவிஞர் கேட்கிறார், ஆசார சீர் திருத்த மெல்லாம் நம்மவர்களே செய்யக் கூடி யது. இதற்கு அரசாங்கத்தின் தயவு தேவை யில்லை.

ஆகவே, இந்தச் சபை நன்கு வேலை செய்வ தற்குச் சில வழிகளை பாரதியார் கூறுகின்றார். முதலாவது சொந்த பாஷையில் மஹாநாடு நடைபெற வேண்டும். பேசுவோர் தமது வாழ்க்கையில், தமது இல்லத்திலே எ தை யெல்லாம் சாதித்திருக்கிறார் எ ன் ப ைத க் கண்டறிந்து பத்திரிகைகளில் .ெ வ ளி யி ட வேண்டும். “தாம் பேசும் கொள்கையின் படி நடப்பவரா என்பதை நிச்சயித்து அறிந்து கொள்ள வேண்டும்” என்பது அவர் கூறும் - ,