பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/251

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


236

இது ஏதடா பெரிய வம்பாய் முடியும் போலிருக்கிறதே! இன்று மேடை ஏறி அரசியல் பற்றியும், பிறவற்றைப் பற்றியும் கச்சேரி செய்ப வர்களுக்கெல்லாம் வேட்டு வைக்கிருரே? இந்த அளவுகோல் பலபேரைப் பேச்சற்றுப் போகச் செய்து விடுமே? ‘கூட்டத்திற் கூடி நின்று கூவிப் பிதற்றலன்றி நாட்டத்திற் கொள்ளாரடி’ என்பது பாரதி வாக்கு.

இருந்தாலும், பெருந்திரளாக மக்கள் இந்த மஹாசபைக்குச் செல்ல வேண்டும் என்றும், பெண்கள் நிறையப் பங்கெடுத்துக் கொண்டு தங்கள் முன்னேற்றத்தைத் தாமே கவனித்து கொள்ளவேண்டும் என்றும் பாரதியார் மக்களைத் தூண்டுகிறார். மக்களின் மனப்பான்மை கண்டு பாரதியார் சோர்வோ, ஏமாற்றமோ இறுதி வரையில் அடையவில்லை)

இப்போது நடைபெறும் 1920-ம் வருஷம் ஜூன் மாஸம் 22-ம் தேதியன்று தொடங்கி, அன்றைக்கும், அடுத்த இரண்டு மூன்று தினங்களும், திருநெல்வேலியில் ‘மாகாண ஆசாரத் திருத்த மஹாஸ்பை நடைபெறும் என்று தெரிகிறது. 21-ந் தேதியன்று மாகாணத்து ராஜரீக மஹா ஸ்பை திருநெல்வேலியில் கூடுகிறது. அதை அனுசரித்து, அதே பந்தரில் ஆசார ஸ்பையும் நடக்கும்.

22-ந் தேதி முதல், இரண்டு மூன்று நாள் கூடி, அங்கு, நம் மாகாணத்து ஆசாரத் திருத்தக்காரர் வழக்கப்படி விவாதங்கள் நடத்தி மாமூலைத் தழுவிச் சில தீர்மானங்கள். செய்து முடித்துப் பின்பு கலைந்து விடுவார்கள்.

எனக்குக் கிடைத்திருக்கும் அழைப்புக் கடிதத்தைப் பார்க்குமிடத்தே இந்த வருஷம் நடப்பது இருபத்திரண்,