பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238

கிறார்களா? அல்லது வெறும் புகையொத்த பதார்த்தங் களாகக் கணிக்கிறார்களா?

மேற்படி ஆசாரத் திருத்த சபைகளிலே அறிவுடைய மனிதர் பலர், ஜனத்தலைவர்களும், உத்தியோக பதவிகளில் உயர்ந்தோரும், பிரபுக்களும், கீர்த்தி பெற்ற பண்டிதர் களும், சாஸ்திரிகளும், நீதி நிபுணர்களும் கூடி அறிவுடன் வாதங்கள் நடத்தி, அறிவுடன் சில தீர்மானங்கள் செய்து முடிக்கிறார்கள். அப்பால், அத் தீர்மானங்களை தமது சொந்த ஒழுக்கத்திலும் தேச ஜனங்களின் நடையிலும் செய்கைகளாக மாற்றுவதற்குரிய முயற்சிகள் ஒன்றுமே நடப்பதில்லை. எனவே, மனித அறிவை இவர்கள் களைந்து போடும் குப்பைக்கு நிகராகவே மதிக்கிறார்கள் என்று தோன்றுகிறது. மேலும், அந்தத் தீர்மானங்கள் நிறைவேறு வதினின்றும் தேசத்து ஜனங்களுக்கு நன்மை விளையும் என்ற உண்மையான நம்பிக்கையுடனேயே அவை பிரேரே பணை செய்யப் படுகின்றன. இந்த விஷயத்தில் ஏராளமான கால விரயமும் பொருட் செலவும் ஏற்படுகின்றன. இவ்வளவுக்கும் முடிவாக யாதொரு பயனும் விளையக் காணுேமென்றால், இந்த ஆசாரத் திருத்தக்காரரின் சக்தியைக் குறித்து நாம் என்ன சொல்லலாம். இவ் வருஷ மேனும், இவ்விஷயத்தில் தகுந்த சீர்திருத்தம் ஏற்படு மென்று நம்புகிறேன். முதலாவது விஷயம், ஆசாரத்திருத்த மஹா சபையில் பேசுவோராவது, “உண்மையிலேயே தாம் பேசும் கொள்கையின்படி நடப்பவரா என்பதை நிச்ச யித்து அறிந்துகொள்ள வேண்டும். மஹா சபைக்குப் பிரதி நிதிகளாக வந்திருப்போர் அத்தனைபேரிலும் பெரும் பகுதி யார் இப்போது உடனே தத்தம் குடும்ப வாழ்க்கையில் என்னென்ன சீர்திருத்தங்களை நிறைவேற்றத் தயாராக இருக்கிறார்கள் என்பதைக் கண்டு பிடித்துப் பத்திரிகை களில் வெளியிட வேண்டும்.