பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

“எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு.”

தேசாபிமானம் முதலிய உத்தம குணங்கள் இல்லா விடினும், இந்த முயற்சி தொடங்கியவர்கள் உலகப்பொது நீதிகளை நன்குணர்ந்தோர். யாவராலே தொடங்கப்பட்ட தாயினும், இப்போது இம்முயற்சி தேச ஜனங்களின் பொதுக் கார்யமாக பரிணமித்து விட்டது. எனவே, இவ்வருஷத்து மஹா ஸ்பையில் தமிழ் மக்கள் பெருந் திரளாக எய்தி நின்று, ஸ்பையின் விவகாரங்கள் பெரும் பாலும் தமிழிலேயே நடக்கும்படியாகவும், தீர்மானங்கள் பின்பு தேச ஒழுக்கத்தில் காரியப்படும் வண்ணமாகவும் வேண்டிய ஏற்பாடுகள் செய்யக்கடவர். எதற்கும் பிரதி நிதிகள் நல்ல பெருங்கூட்டமாக வந்தால்தான் நல்ல பயன் ஏற்படும். ஜெர்மன் பாஷையில் ‘கூட்டம்’ என் பதற்கும் ‘உத்ஸாஹம்” என்பவற்கும் ஒரே பதம் வழங்கப் படுகிறது. பெருங்கூட்டம் சேர்ந்தால் அங்கு உத்ஸாஹம் இயல்பாகவே பெருகும் என்பது குறிப்பு.

பொது ஜன உத்ஸாஹமே ஸ்கல கார்யங்களுக்கும் உறுதியான பல மா கும். எனவே, நமது தேச முன்னேற்த்தின் பரம ஸாதனங்களில் ஒன்றாகிய இந்த ஆசாரத் திருத்த மஹா சபையின் விஷயத்தில் நம்மவர். ஆண் பெண் அனைவரும், தம்மால் இயன்ற வகைகளி லெல்லாம் உதவி புரிந்து மிகவும் அதிகமாக உத்ஸாகம் காட்டுவார்கள் என்று நம்புகின்றேன்.

41. நாற்குலம்

(குறிப்பு: இந்த நிமிஷத்திலே இந்த தேசத் தில் பிறந்தவர்கள் எல்லாரும் ஒரே ஜாதி என்று பாரதியார் வேறொரு இடத்திலே கூறியிருக்கிரு.ர்.