பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

241

தமிழ்நாட்டில் ஒரே ஜாதிதானுண்டு. அதன் பெயர் தமிழ் ஜாதி என்றும், நெல்லையப்பருக்கு எழுதிய கடிதத்தில் அவர் சொல்லியிருப்பதையும் கவனிக்க வேண்டும்.

“நான்கு வருணங்கள் இருக்கலாம். ஆனல் அந்த வருணங்களில் பேதம் இருக்கக் கூடாது.” என்று திலகர் கூறியதை இக் கட்டுரையிலே தெளிவுபடுத்துகிரு.ர்.

பறை பதினெட்டு, நுளே நூற்றெட்டு இங்கேயும் எத்தனையோ உட்பிரிவுகள். அவர் களுக்குள் உயர்வு தாழ்வு! இப்படியே மற்ற செட்டி, பிள்ளை, கவுண்டன் இவர்களுக்குள்ளும் பல்வேறு பிரிவுகள். ஐயங்கார் என்றால் வடகலை தென்கலை இவற்றிலெல்லாம் பருப்பு வேகாது, ஒரே அடியாக எல்லாக் குலங்களுக்கும் முழுக்குப் போட்டு விடுவதுதான் கடைத்தேறுவதற்கு ஒரே வழி.

இந்தியர்கள் ஒரே ஜாதி; அது பாரத ஜாதி. ஒருவன் இந்துவாக இருக்கலாம். தம்பி வேறு சமயத்தைப் பின்பற்றுபவனுக இருக்கலாம். ஆனல் அவர்கள் ஒரே ஜாதி அதில் வேறு பாடிருக்கக்கூடாது.

ஆயிரம் பிளவுகள் இருப்பதைக் காட்டிலும் நாற்குலம் என்றாவது தொழில் முறையிலே நான்காகப் பிரிப்பதை முதலில் ஏற்றுக்கொள் வோம் என்று பாரதியார் ஒர் இடைக்கால நிவாரணமாக இதைக் கூறுகிரு.ர்.