பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

243

லக்ஷணம் என்று பலர் நினைக்கிறார்கள். பழைய காலத்து விஷயம் இப்படியில்லை.

“நான்கு வர்ணங்கள் பிறப்பினலேயல்ல, குலத்தாலும் தொழிலாலும் உண்டாயின என்று கீதை சொல்லுகிறது. அதன்படி பார்த்தால் இப்போது நமக்குள் கூடித்திரியர்; எங்கேயிருக்கிரு.ர்கள்? நம்மைக் காப்போர் ஆங்கிலேயர்கள்: ஹிந்துக்களுள் கூடித்திரியரைக் காணுேம். இந்தக் கான்பூர் பெரிய வியாபார ஸ்தலம். ஆனால், இங்குள்ள வைசியர் பிற தேசத்து வியாபாரிகளின் வசத்தில் நிற்கிறார்கள். செல்வத்தலைமை நமக்கில்லை; இப்போதுள்ள பிராமணர் தாமே தேசத்தின் மூளையென்று செல்லுகிறார்கள். ஆனல் இந்த மூளை மண்ணடைந்து போய், நாம் வெளியிலிருந்து அதிக மூளை இறக்குமதி செய்யும்படி நேரிட்டிருக்கிறது.

“நான்கு வர்ணத்தாருக்குரிய நால்வகைத் தொழில் தளும் ஹிந்துக்களல்லாத பிறர் நியமனப்படி நடக்கின்றன. நாமெல்லோரும் தொண்டர் நிலையிலே இருக்கிருேம். தேசம் கெட்ட ஸ்திதியிலே இருக்கிறது. உங்களுடம்பில் பிராமண ரத்தம் ஒடுவதாகவும் கூடித்திரிய ரத்தம் ஒடுவதாக பும் நீங்கள் வாயில்ை சொல்லலாம். ஆனால், உங்களுடைய வாழ்க்கை அப்படியில்லை.”

இவ்வாறு திலகர் சொல்லியதிலிருந்து நமது தேசத் நிற்கு மிகுந்த நன்மை யுண்டாகக் கூடும். ஏனென்றால், இவர் தேச முழுவதிலும் சுதேசியக் கட்சியாருக்குத் தலைவராக இருப்பது மாத்திரமேயன்றி, மஹாராஷ்டிரத்து வைதீகப் பிராமணர்களின் தலைவராகவும் விளங்குகிரு.ர். வேத சாஸ்திர ஆராய்ச்சியில் உயர்ந்த கீர்த்திபெற்றவர். நெடுங்காலமாக இடைவிடாது செய்துவரும் ஆராய்ச்சி நிலுைம், உயர்ந்த மேதையிலுைம், நமது பூர்வீகமான ஜாதி தர்மத்தின் உட்கருத்தை நன்முகத் தெரிந்துகொண்டு