பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/26

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


| 1

பொய்யடிமைக் கள்வர்களும் மலிந்திருப்பதையும், இப் போல்லா இழிவுணர்ச்சிகளைத் தங்கள் எழுத்து மூலமும், பொழுது போக்கு என்ற நொண்டிச் சாக்கு மூலமும் வளர்க்க முயலுவதையும் கண்டால், அவர் உள்ளம் எவ்வாறு பொங்கி எழுமோ அறியேன். இடியின் மாபெருங் காஜனயோடு இப்போக்கை அவர் சாடுவார் என்பது மட்டும் திண்ணம்,

3. வந்தே மாதரம் (தாயுமானவர் ஆனந்தக் களிப்பு மெட்டு)

குறிப்பு: பாரதியார் முதன் முதலாக நூல்வடிவத்திலே வெளியிட்ட மூன்று பாடல்களில் இதுவும் ஒன்று. தாயுமானவரின் ஆனந்தக் களிப்பு இவரைக் கவர்ந்துள்ளது. “ஆதிசிவன் பெற்று விட்டான்’, ‘தாயின் மணிக்கொடி பாரீர்” என்பனபோன்ற பாடல்கள் இந்த மெட்டிலேயே அமைந்துள்ளன. ஆனல் சங்கர சங்கர சம்பு என்ற சந்த முள்ள தாயுமானவர் பாடலுக்கும் இதற்கும் எத்துணை வேறு பாடு! தாயுமானவர் பாடல் ஒரு வகையிலே சிறந்தது என்பதை மறுக்க முடியாது. பாரதியார் அந்த எளிய ஆனந்தக் களிப்பின் சந்தத்தையே எடுத்துக் கொண்டு, வேறு வகையான உணர்ச்சிகள்'தெறிக்கும்படி பாகப் பாடுகின்றார். முப்பது கோடியும் வாழ்வோம்இழில், முப்பது கோடி முழுமையும் வீழ்வோம்’ என்பன போன்ற வரிகள் சிங்கத்தின் கர்ஜனையோடு ஒலிக்கின்றன.

உலக இன்பங்களை வெறுத்து ஒதுக்கிச் சிவானந்தப் பற்றை அருளும் மோனகுருவைப் பற்றிப் புகழ்ந்து