பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

245

நேத்திரம். சரீர இன்பங்களைத் தேடுவதே முதற் காரிய மாகக் கொண்ட மனிதர் மிகுந்து போயிருக்கும் இவ்வுலகத் தில், சிலர் அந்தப் படியைக் கடந்து மேல் ஏறிப்போய் உண்மை தேடுவதே முதற் காரியமென்றும், மற்ற தெல்லாம் அதற்குப் பிறகுதான் என்றும் உணர்ந்து நடப் பாராயின், அவரே தலை மக்கள். மற்ற வருணத்து நெறி களையும் இப்படியே வகுத்தறிந்து கொள்ளுதல் எளிது.

42. பறையர்

(குறிப்பு : நாற்குலம் என்பதற்கு எழுதிய குறிப்பே இதற்கும் பொருந்தும். ஆகவே தனிக் குறிப்பு எழுதவில்லை.)

“பறையர் என்பது மரியாதை உள்ள பதம் இல்லை” என்று கருதி, இக்காலத்தில் சிலர் பஞ்சமர் என்ற சொல்லை அதிகமாக வழங்குகிரு.ர்கள். நானும் சில சமயங்களில் பஞ்சமர் என்ற சொல்லை வழங்குவது உண்டு. ஆனல் பறையர் என்பதே மேற்படி ஜாதியாருக்குத் தமிழ்நாட்டில் இயற்கையாக ஏற்பட்ட பெயர். பறை என்பது பேரிகை. பூர்வ காலத்தில் நமது ராஜக்கள் போர்செய்யப் போகும் போது ஜயபேரிகை கொட்டிச் செல்லும் உத்தமமான தொழிலை இந்த ஜாதியார் செய்துவந்தபடியால் இவர் ளுக்கு இப்பெயர் வழங்குவதாயிற்று. இது குற்றமுள்ள தமில்லை யென்பதற்கு ருஜூ வேண்டுமானல், மேற்படி கூட்டத்தாரால் சென்னையில் நடத்தப்படும் சபைக்கு பறையர் மஹாசபை’ என்று பெயர் வைத்திப்பதைக் ாண்க. அவர்களை மிருகங்களைப் போல் நடத்துவது கற்றமே யொழிய பறையர் என்று சொல்லுவது குற்ற இல்லை.

t. .—16