பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/261

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


246

என்னடா இது ஹிந்து தர்மத்தின் பஹிரங்க விரோதி கள் பறையரைக் கொண்டு பிராமணரை அடிக்கும்படி செய்யும்வரை சென்னைப் பட்டணத்து ஹிந்துக்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள்! அடே! பார்ப்பானத் தவிர மற்ற ஜாதியாரெல்லாம் பறையனை அவமதிப்பாகத் தான் நடத்துகிறார்கள். எல்லாரையும் அடிக்க பறையரால் முடியுமா? பறையருக்கு அனுகூலம் மற்ற ஜாதியார் செய்யத் தொடங்கவில்லையா? எதற்கும் ஹிந்துமத விரோதிகளின் பேச்சைக் கேட்கலாமா? நந்தனரையும், திருப்பாளுழ் வாரையும் மற்ற ஹிந்துக்கள் கும்பிடவில்லையா? பறை யருக்கு நியாயம் செலுத்தவேண்டியது நம்முடைய முதற் கடமை. அவர்களுக்கு முதலாவது வேண்டியது சோறு, சென்னைப் பட்டணத்து பட்லர்’களைப் பற்றிப் பேச்சில்லை. கிராமங்களிலுள்ள பண்ணைப் பறையர்களைப் பற்றிப் பேச்சு. அவர்களேயெல்லாம் ஒன்று திரட்டு. உடனே விபூதி நாமத்தைப் பூசு. பள்ளிக்கூடம் வைத்துக் கொடு. கிணறு வெட்டிக் கொடு. இரண்டு வேளை ஸ்நாநம் பண்ணச் சொல்லு. அவர்களோடு சமத்துவம் கொண்டாடு. நான் நெடுங்காலமாக சொல்லி வருகிறேன். அவர்களை எல்லாம் உடனே ஒன்று சேர்த்து ஹிந்து தர்மத்தை நிலைக்கச் செய்யுங்கள். நம்முடைய பலத்தை சிதற விடாதேயுங்கள். மடாதிபதிகளே! நாட்டுக்கோட்டைச் செட்டிகளே! இந்த விஷயத்தில் பணத்தை வாரிச் செலவிடுங்கள். இது நல்ல பயன் தரக்கூடிய கைங்கர்யம். தெய்வத்தின் கருணைக்குப் பாத்திர மாக்கும் கைங்கர்யம்.

‘பறையரை’, ‘பரை (அதாவது ஆதிசக்தி முத்துமாரி) யின் மக்களென்றும் பொருள் சொல்வதுண்டு. நமக்கு மண்ணுழுது நெல்லறுத்துக் கொடுக்கிற ஜாதியாரை நாம் நேரே நடத்த வேண்டாமா? அது சரிதான். இனிமேல் பறையன் கை நீட்டாமல் இருப்பதற்கு வழி தேடிச் கொள்ளுங்கள். சென்னைப் பட்டணத்திலே நாலு பட்ல!