பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/28

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


13

விடுதலை இயக்க காலத்தில் இப்பாடல் ஒலிக்காத அரசியல் கூட்டம் இல்லை யென்றே கூறவேண்டும்.

முதன்முதலில் வெளியான இப்பாடலில் கீழ்க்கண்ட சரணமும் சேர்ந்திருந்தது.

தேவி நம் பாரத பூமி-எங்கள்

தீமைகள் யாவையுந் தீர்த்தருள் செய்வாள்

ஆவியுடல் பொருள் மூன்றும்-அந்த

அன்னைபொற் ருளினுக் கர்ப்பிதமாக்கு. (வந்தே)

1919இல் பரலி-நெல்லையப்பர் வெளி யி ட் ட “நாட்டுப் பாட்டில் இச் சரணம் இடம் பெறவில்லை. முதற்பதிப்பில் காணப்பெருத புல்லடிமைத் தொழில் பேணி என்று, ஆருவது சரணமாகக் காண்கிறது. பாரதியாரே இந்த மாறுதல்களைச் செய்தாரா என்பதை ஆராய்ந்து முடிவு செய்ய வேண்டும்.

பாரத தேசத்தில் பிறந்தவர் அனைவரும் ஒன்று என்பதையும், ஒற்றுமையே வாழ்வுதரும் என்பதையும் இப்பாடல் பெரிதும் வலியுறுத்துகின்றது.

பல்லவி வந்தே மாதர மென்போம்-எங்கள் மாநிலத் தாயை வணங்குது மென்போம். (வந்தே)

சரணங்கள் ! ஜாதி மதங்களைப் பாரோம்-உயர்

ஜன்மமித் தேசத்தி லெய்தின ராயின் வேதிய ராயினும் ஒன்றே-அன்றி

வேறு குலத்தினராயினு மொன்றே. (வந்தே)