பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/29

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


2.

14

சனப் பறையறகளேனும்-அவர்

எம்முடன் வாழ்ந்திங் கிருப்பவ ரன்றாே?

சீனத்த ராய்விடு வாரோ?-பிற

தேசத்தர் போற்பல தீங்கிழைப் பாரோ?

(வந்தே)

ஆயிர முண்டிங்கு ஜாதி-எனில்

அன்னியர் வந்து புகலென்ன நீதி?-ஒர்

தாயின் வயிற்றிற் பிறந்தோர்-தம்முட்

சண்டை செய்தாலும் சகோதர ரன்றாே?

(வந்தே)

ஒன்று பட்டாலுண்டு வாழ்வே-நம்மில்

ஒற்றுமை நீங்கி லனவர்க்கும் தாழ்வே

நன்றிது தேர்ந்திடல் வேண்டும்-இந்த

ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்?

(வந்தே)

எப்பதம் வாய்த்திடு மேனும்-நம்மில்

யாவர்க்கு மந்த நிலை பொதுவாகும்: முப்பது கோடியும் வாழ்வோம்-விழில்

முப்பது கோடி முழுமையும் வீழ்வோம்.

(வந்தே)

புல்லடிமைத் தொழில் பேணிப்-பண்டு

போயின நாட்களுக் கினி மனம்நாணித்

தொல்லை யிகழ்ச்சிகள் தீர-இந்தத்

தொண்டு நிலைமையைத் துரவென்று தள்ளி.

(வந்தே)