பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. நடிப்புச் சுதேசிகள்

குறிப்பு : இப்பாடல் 1907 வாக்கில் எழுதப் பட்டுள்ளது. கூட்டத்தில் கூடி வாய்கிழியப் பேசிவிட்டுப் நிறகு நாட்டத்திற் கொள்ளாதவர்களுக்கு நல்ல சூடு கொடுக்கிறார். இன்றும் இந்த நிலை மாறவில்லை. மாறியிருந் தால் நாடு எவ்வளவோ ஓங்கி வளர்ந்திருக்கும். வந்தே மாதரம் என்று முழங்குவதால் மட்டும் எல்லாம் பலித்து விடாது. மேடையேறிப் பேசுவதில் ஒரு பங்கையாவது செய்கையில் நடத்திக் காண்பிக்க முழுமனதுடனும், ஆர்வத்துடனும் முன்வரவேண்டும். ஆசார திருத்த மஹா சபை என்ற கட்டுரையிலும், சுமார் 13 ஆண்டுகளுக்குப் பிறகு பாரதியார் இதே கருத்தை வெளியிடுகின்றார் என்பதை நோக்க வேண்டும். பழித்துக் கூறியாவது மக்களைத் திருத்த முடியுமா என்று, கவிஞருடைய உள்ளத்தில் கொழுந்து விடும் ஆசையை இப்பாடலில் காண்கிருேம்.

பழித்தறிவுறுத்தல்

கிளிக் கண்ணிகள்

1. நெஞ்சி லுரமு மின்றி

நேர்மைத் திரமு மின்றி வஞ்சனை சொல்வா ரடீ-கிளியே

வாய்ச் சொல்லில் வீரரடி.

2. கூட்டத்திற் கூடி நின்று

கூவிப் பிதற்ற லன்றி நாட்டத்திற் கொள்ளாரடி-கிளியே நாளில் மறப் பாரடீ,