பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

கப்பலேறுவாயோ!-அடிமை! கடலைத் தாண்டுவாயோ?

குப்பை விரும்பும் நாய்க்கே-அடிமை!

கொற்றத் தவிசுமுண்டோ?

ஒற்றுமை பயின்றாயோ?-அடிமை!

உடம்பில் வலிமையுண்டோ?

வெற்றுரை பேசாதே!-அடிமை!

வீரியம் அறிவாயோ?

சேர்ந்து வாழுவீரோ-உங்கள் ?

சிறுமைக் குணங்கள் போச்சோ?

சோர்ந்து வீழ்தல்போச்சோ-உங்கள்

சோம்பரைத் துடைத்திரோ?

வெள்ளை நிறத்தைக் கண்டால்-பதறி

வெருவலே ஒழித்தாயோ?

உள்ளது சொல்வேன்கேள்-சுதந்திரம்

உனக்கில்லை மறந்திடடா!

நாடு காப்பதற்கே-உனக்கு

ஞானம் சிறிதுமுண்டோ ?

வீடுகாக்கப் போடா!-அடிமை!

வேலைசெய்யப் போடா!

சேனை நடத்துவாயோ!-தொழும்புகள்

செய்திட விரும்பாயோ?

ஈனமான தொழிலே-உங்களுக்கு இசைவதாகும் போடா!

(தொண்று

(தொண்டு

(தொண்டு

(தொண்டு

(தொண்டு

(தொண்டு