பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

பாரதி கவிதைகள் என்ற பெருந் தொகுப்பில் குறித்து வைத்திருந்தேன். அந்த நூலை யாரோ எடுத்து சென்றவர் திருப்பித் தரவே இல்லை. எவ்வளவோ விக மதிக்க முடியாத தனத்தை இழந்து விட்டேனே என்று இன்றும் நான் வருந்துவதை யார் அறிவார்கள்?

இக் கவிதைகளை எழுதிய காலத்தை உத்தேசமாகவே தந்துள்ளேன். ஆனல் பாரதியார் பெண்ணுரிமை, பெண் விடுதலை பற்றி, 1906 ஆம் ஆண்டிலே அவர் சக்கரவர்த்தின என்ற மாசிகைக்கு ஆசிரியராக இருந்த காலத்திலேயே முற்போக்கான எண்ணங்களைத் தெளிவாகக் கொண்டிரு தார் என்பதில் ஐயமில்லை.

பழங்கால மனிதராக மண்டயம் ஸ்ரீநிவாசாசார்யா தோற்றமளித்தார். பெண் விடுதலை பற்றியும் அவர் தீவிர வாதியாக இருக்கவில்லை. அவருடைய ஆதரவிலே பாரதியார் இந்தியா வார இதழை நடத்திலுைம், தமது சொந்த எண்ணங்களை, அன்று பெரும்பாலும் ஏற்றுக் கொள்ளப்படாத கருத்துக்களைப் பாரதியார் வெளியிடத தயங்கவில்லை. ஆசார்யார் அவர்களும் பாரதியாருடைய எண்ணங்களுக்கு மிகவும் மதிப்புக் கொடுத்து வந்திருச் கிறார் என்பதை அறியும் போது, அவர் எவ்வளவு பெரியவர் என்பது நன்கு விளங்குகிறது.

ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக வாழ்வோம்’ என்ற பாரதியாருடைய ஆசை இன்றும் முற்றிலும் நிறை வேறவில்லை என்பது சிந்தனைக் குரியது. ஆண்களெல்லாம் மேல்நாட்டு நாகரிகத்திலே மயங்கிச கிடந்த காலத்தில் நமது பண்பாட்டைக் காப்பாற்றிய வர்கள் நமது பெண்மணிகளே ஆவர். அவர்களுக்கு இன்னும் சம நியாயம் வழங்கப்படாமலிருப்பது கண்டனத் திற்குரியது.