பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/40

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


25

“இந்த நாட்டு இளம் விதஸ்வகளின் கண்ணிர்தான் நாட்டை அடிமைப் படுத்தியது. இது உங்களுக்குத் தெரியவில்லையா?” என்று பெருந்துறவியாகிய சுவாமி விவேகாநந்தரே இடித்துக் கூறுகிறார். ஆணுக்கு அறுபது வயதானலும் மனைவி இறந்துவிட்டால் வேறு மணம் செய்து கொள்கிருன். இருபது வயது இளம் விதவைக்கு இவ்வுரிமை கிடையாது. இப்படி எத்தனையோ நமது சமூகத்திலே குறைபாடுகள். ஆணுக்கு ஒரு நீதி: பெண் ணுக்கு ஒரு நீதி என்பது மறைந்து மண்ணுக வேண்டும். அன்றுதான் பாரத அன்னையின் துயரம் மறையும்.

இப்பாடல்கள் பாரதியும் பெண்ணுரிமையும் என்ற எனது ஐந்தாவது நூலில் வந்திருந்தாலும், இவற்றின் முக்கியத்தை உணர்ந்து இங்கும் தரப்படுகின்றன.

இப்பாடல்கள் பெண்விடுதலைக்கு மஹாகவி வழங்கிய மாக்ன கார்ட்டா உரிமைச் சாசன மாகும்.

பெண்கள் விடுதலைக் கும்மி

945

காப்பு பெண்கள் விடுதலை பெற்ற மகிழ்ச்சிகள் பேசிக் களிப்பொடு நாம் பாடக் கண்களிலே யொளி போல வுயிரில் கலந்தொளிர் தெய்வநற் காப்பாமே.

1. கும்மியடி தமிழ் நாடு முழுதுங்

குலுங்கிடக் கைகொட்டிக் கும்மியடி நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின நன்மை கண்டோ மென்று கும்மியடி. (கும்மி)