பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/43

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


4.

28

ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவி லோங்கியில் வையந் தழைக்குமாம் பூணு நல்லறத் தோடிங்கு பெண்ணுருப் போந்து நிற்பது தாய்சிவ சக்தியாம் நானு மச்சமும் நாய்கட்கு வேண்டுமாம் ஞான நல்லறம் வீர சுதந்திரம் பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம் பெண்மைத் தெய்வத்தின் பேச்சுகள் கேட்டிரோ!

நிலத்தின் தன்மை பயிர்க்குள தாகுமாம் நீசத் தொண்டு மடமையுங் கொண்டதாய் தலத்தில் மாண்புயர் மக்களைப் பெற்றிடல் சாலவே யரி தாவதொர் செய்தியாம் குலத்து மாதர்க்குக் கற்பியல் பாகுமாம் கொடுமை செய்து மறிவை யழித்துமந் நலத்தைக் காக்க விரும்புதல் தீமையாம் நங்கை கூறும் வியப்புகள் கேட்டிரோ!

புதுமைப் பெண்ணிவள் சொற்களுஞ் செய்கையும் பொய்மை கொண்ட கலிக்குப் புதிதன்றிச் சதுமறைப்படி மாந்த ரிருந்த நாள் தன்னிலே பொதுவான வழக்க மாம் மதுரத் தேமொழி மங்கைய ருண்மைதேர் மாதவப் பெரி யோருட னெப்புற்றே முதுமைக் காலத்தில் வேதங்கள் பேசிய முறைமை மாறிடக் கேடு விளைந்ததாம்.

நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கு மஞ்சாத நெறிகளும் திமிர்ந்த ஞானச் செருக்கு மிருப்பதால் செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்